உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 22

கூடுமானாலும், புலமை சான்ற ஓர் உயர் அறிவார்ந்த நங்கையை மணஞ்செய்வது அதனிலும் பெருந்தொல்லைகள் தருவது ஆகும். கெஞ்சியையும் உங்களையும் போன்ற உங்களையும் போன்ற இளவரசர்கள்கூட இவ்வளவு புலமை மூட்டையையும், அறிவு மூட்டையையும் சுமக்கும்பெண்ணை உங்களுக்கு ஆதரவாகக் கொள்ள மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

'பெண்கள் அவ்வப்போது தங்கள் அறியாமையால் தமக்குத் துன்பம் விளைவிப்பவராய் இருந்தாலும் கூடக் கேடில்லை. நம் பழம் பிறவிகளின் வினைப் பயன்கள். நம்மை அவளுடன் இயல்பாக ஒத்த உணர்வில் இணைத்தால் போதுமானது. முற்றிலும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆடவர்களுக்குக்கூட இவ்வளவு பெருங்கல்வி வாழ்க்கையில் நன்கு முன்னேறுவதற்கு அவசியமன்று என்றுதான் நான் கூறுவேன்.'

இத்துடன் அவன் பேச்சை நிறுத்தினான். ஆனால், கெஞ்சி இளவரசனும் பிறரும் கதை முழுவதையும் இயல்பான முடிவுவரை கேட்க விரும்பினர். ஆகவே அவ்வணங்கு முற்றிலும் போற்றத்தக்க பண்புடையவளே என்று சாதித்து அவளைக் கிளற முயன்றனர். ஆயினும் கதையைத் தான் இன்னும் தொடர முடியாது என்று SAபு எவ்வளவோ மறுத்தான். பின் எவ்வளவோ முகத்தைக் கோண வைத்துப் பிகுச் செய்தபின், ஒருவாறு தொடர்ந்தான்.

நான் நீண்ட நாட்களாக அவளைப் பார்க்கவில்லை. இறுதியில் தற்செயலாக அவள் வீட்டுக்குச் செல்ல நேர்ந்த பொழுது, அவள் வழக்கம்போல இயல்பாக என்னை வரவேற்க வரவில்லை. வெறுக்கத்தக்க முறையில் ஒரு திரை மறைவிலிருந்து பேசலானாள். "ஓகோ, இப்போதுதான் இவள் ஊடுகிறாள் போலிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தான் இவளிடமிருந்து முறித்துக் கொள்ள வேண்டும்” என்று நான் என் அறியாத்தனத்தினால் நினைத்துக் கொண்டேன். சிறு செய்தி களுக்காக முகம் கோணும் இயல்புடையவர்களல்லர் அவ்வளவு அறிவு மிக்கவர்கள் என்பதை நான் சிறிது மறந்திருந்தேன். உலகியலை நன்கு அறிந்ததாக அவள் பெருமையடித்துக் கொள்பவள். என் பாசத்தின் குறைபாட்டைப் பற்றி அவள் ஒன்றுமே கவலைப்படுபவளுமல்லள்.