உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

81

'ஒரு சிறிது கூடத் தயங்காத குரலிலேயே அவள் என்னுடன் பேசினாள். சில வாரங்களாக அவளுக்கு நீர்க் கொண்டிருந்ததாம். அதனால் அவள் காரமான பூண்டுத் தைலம் உட்கொண்டிருந் தாளாம். இது அவள் மூச்சுக்கு அருவருப்பான வாடையை அளித்திருந்ததனாலேயே, அவள் என்னருகே வரத் தயங்கினாளாம். ஆயினும் தனி முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஏதேனும் இருந்தால் அது பற்றிக் கவனம் செலுத்தி வாதிக்க அவள் சித்தமாகவே இருந்ததாகக் கூறினாள். இவ்வளவையும் அப்பழுக்கற்ற முழுநிறை இலக்கிய நடையிலே அவள் தெரிவித்தாள்.

'இதற்கு என்ன தகுதியான விடையளிப்பது என்று அறியாமல், நான் "போய் வருகிறேன்" என்று எழுந்தேன். சந்திப்புத் தனக்கு அவ்வளவு சுமுகமான வெற்றி குறிப்ப தாயில்லை என்று கண்டு, அவள் சற்று உயர்த்திய குரலில் பின்னும் பேசினாள். “என் மூச்சுக்கு இவ்வாடை அகன்ற பின், தயை கூர்ந்து திரும்பி வாருங்கள்” என்றாள்.

'இது செவியில் படாதது மாதிரி என்னால் நடித்து விட முடியவில்லை. அதே சமயம் சந்திப்பை நீட்டிக்கவும் எனக்கு விருப்பம் கிடையாது. ஏனெனில் அவ்வாடை இச்சமயம் முற்றிலும் பொறுக்க முடியாததாயிற்று. சிறிது கடுமையாக நான் என் உட்குறிப்பு அமைய ஒரு பழஞ் சிலேடைப் பாடலைக் கூறினேன்.

'மாடத் தலையில் ஆடற் சிலந்தி

பீடில் வருகை குறித்த இவ்விரவின் நினைப்பூட்டுத் தைல நாளின் மறுநாள் மனைக்கட் படவிழைந் தனையோ?'

இப்பாடலையடுத்து நான் போகிற போக்கிலேயே முகம் திரும்பியவாறு,"உன் பிழை மறத்தற்குரியதன்று" என்று கூறிக் கொண்டே விரைந்தேன். ஆனால், அவளோ என்னைத் தொடர்ந்தே வந்தாள்."இரவோடிரவாக, ஒவ்வோர் இரவும் நாம் சந்திக்கும் நாட்களில், நினைப்பூட்டு நாளிலும் நான் சந்திக்கத் துணிவேனே" என்று அவள் கூறினாள் நினைப் 'பூட்டும்' நாள், நின்னைப் பூண்டு நாள் என்ற என் பாட்டின் சிலேடையை