88
அப்பாத்துரையம் - 24
பயணம் அமைதியாக, அமைதியான கடலிலேயே தொடங்கிற்று. கப்பல் பிரயாணிகளும் கப்பலோட்டிகளும் இன்பமாகப் பொழுதுபோக்கி உரையாடிக் கொண்டிருந்தனர்.
மூடுபனியைப்பற்றியும் கரையோரமுள்ள பலவகையான கொடும் பாறைகளைப்பற்றியும் கூட அவர்கள் காரசாரமாகப் பேசினர். மினிக்கியர்ப் பாறைகள், சூவாஸ், மங்க், டக், சூவஸ்டு ஆகிய பெயர்கள், ஒவ்வொன்றிலும் எத்தனை பாறைகள், அவற்றின் பண்புகள் எவை என்பனவெல்லாம் பேச்சில் அடிக்கடி விவாதிக்கப்பட்டன. கடலாராய்ச்சியில் கப்பல் அறிஞர்கள் மூழ்கியிருந்தார்கள்.
திடீரென மீகாமன் முழங்கினான், தலைமைக் கப்பலோட்டியைப் பார்த்து. "அட குடிகாரா! கப்பலை எங்கே ஓட்டுகிறாய்?"
அந்த முழக்கம் கேட்டுக் கப்பல் கலகலத்தது.
தங்க்ரூவில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு நின்றான்.
மீகாமன் கப்பலின் ஆணைச் சக்கரத்தைத் தானே மேற் காண்டான். கப்பல் ஸென்ட் ஸாம்ப்ஸனை நோக்கிச் செல்வ தற்கு மாறாக, ஜெர்ஸியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவன் அதை நேர்வழிக்கு மீண்டும் திருப்பினான்.
அச்சமயம் கடலகமெங்கும் புயலின் எச்சரிக்கை அமைதி வடிவில் படர்ந்தது. ஜெர்ஸி அருகில் செல்லும் கப்பல்கள் எந்தத் திசையில் சென்றாலும் ஜெர்ஸித் துறைமுகத்தின் பாதுகாப்பை நாடி ஓடின.
ஆனால் டியூராண்டு ஜெர்ஸிப் பக்கமிருந்து தலை திருப்பிச் சென்றது. முழுவேகத்துடன் கப்பல் இயந்திரங்கள் முடுக்கப் பட்டன. அந்தப் பழிகேடன் செய்துவிட்ட தாமதத்தைச் சரிக்கட்ட முனைந்தான் மீகாமன்.
கப்பலின் போக்கில் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஆனால் நெருக் கடிக்கேற்ற அளவில் மீகாமன் செயல்வீறு உயர்ந்தது. மீகாமனின் அச் செயல்வீறு கண்டு எல்லாரும் வியந்து பாராட்டினர். அவன் இயந்திரத்தினுடன் ஒரு இயந்திரம்போல