உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

89

உழைத்தான். சிப்பந்திகள் ஒவ் வொருவர் செயலையும் அவன் கவனித்து நின்று அவர்கள் நாடி நரம்பாய் இயங்கினான்.

கப்பல் விரைந்து சென்றது. கதிரவன் வான விளிம்பை முற்றினும் அணுகவில்லை. ஆனால் வானகத்தில் எவருக்கும் தெரியாத ஒரு சிறு வெண்புள்ளி மீகாமன் கண்ணுக்குத் தெரிந்தது. அது விரைவில் பெரி தாயிற்று. மேல்திசை வானகத்தை அது மறைத்தது. பின் வான விளிம் பெங்கும் பரந்து நடுவே ஒரு இடைவெளியில் மட்டும்தான் கதிரவனொளி தெரிந்தது. மற்ற இடமெங்கும் மூடுபனித் திரையின் மூடாக்கு நிலைத்தது.

கப்பலோட்டிகளுக்கு மின்னல், இடி, புயல், காற்று எதையும் விட ஆபத்தானது இந்த மூடுபனிதான். அதில் சிக்காமல் மீகாமன் கப்பலை மீண்டும் திருப்பித் திருப்பிச் செலுத்தினான். ஆனால் இறுதியில் கப்பலிலேயே ஒருவரை ஒருவர் காணமுடியவில்லை. கீழே கடல் கொதித் தெழுந்தது. மேலே கார்முகில்கள், இடியும் மின்னலும்! நாற்புறமும் பனி மூடாக்கு! கப்பல் அவற்றினிடையே திசை தெரியாது விரைந்து சென்றது.

திசை தெரியவில்லை. திசைகாட்டி புயலின் மின்னாற்றலால் திசைகாட்டவில்லை. கடிகாரங்கள் நின்றன, நேரம் தெரிய வில்லை. கப்பல் கண்ணைக் கட்டிக்கொண்டு இடர் நோக்கிச் சென்றது.

பிரயாணிகளிடையே

கெர்ஸ்னியிலுள்ள

ஒருவன்

ருந்தான். அவன் கெர்ஸ்னிக் கடற்கரையையும் பாறைகளையும் நன்கறிந்தவன். அவன் மீகாமனிடம் வந்து ‘மீகாமன் குளூபின்!' என்று விளித்தான்.

“என்ன செய்தி"

“ஹான்வேப் பாறையை நோக்கி நாம் செல்லுகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது.'

“நான் அப்படி நினைக்கவில்லை”

66

எனக்குப் பாறை தெளிவாய்த் தெரிகிறது, கட்டாயம் கப்பல் செல்லும் திசையைச் சிறிது மாற்றம் செய்ய கோருகிறேன்.”

“எனக்குத் தெரியாதா ஹான்வே, அஞ்சவேண்டாம்.."