பிறமொழி இலக்கிய விருந்து -2
L
99
கடற்காளான்
அவன் இதுமுதல் சிப்பி, நண்டு, ஆகியவற்றையே தேடி உணவாகக்கொள்ளவேண்டியதாயிற்று. தண்ணீர், உணவைவிடப் பெரிய பிரச்னை ஆயிற்று. கடல் நீரில் நனைந்து உடைகள் ஈரம் உலராதிருந்தன. ஈர உடைகளிடையே அதன் உப்பு விடாயைப் பெருக்கிற்று. அச்சமயம் அவன் பறவைகளை நினைத்துப் பார்த்தான். அவை செல்லுமிட மெல்லாம் கூர்ந்து கவனித்துப் பின்பற்றினான். பாறையில் மழைநீர் தங்கிய இடத்தில் அவை நீர் குடுத்தன. அவனும் அவற்றையே நாடிச் சென்று குடித்தான். இதற்குள் அவன் தாடி மீசை வளர்ந்து காட்டு மனிதன் போலத் தோன்றியதனால், பறவைகள் அவனைக் கண்டு அஞ்சாமல் பழக்கமாயின. அவனும் கடும் பசியிலும் அவற்றை உணவாக நாடாமல், அவற்றுடன் நேச உடன்படிக்கை செய்து கொண்டான்.
ஒருநாள் கடற்பாசி தேடிப் பாறைகளிடையே ஒரு குகையில் நெடுந்தொலை சென்றான். குகையின் கோடியிலுள்ள இடுக்கால் நீரின் கீழுள்ள ஒரு அழகிய குகைக் காட்சியைக் கண்டான். நீரின் கீழுள்ள ஒளிக்கதிர் பன்னிற வண்ணங்களாய்க் காட்சியளித்தன. குகையினுள் உட்குகை ஒன்று இருந்தது. அதில் ஏதோ ஒன்று ஒரு மனித உருவம்போல் காட்சியளித்தது. தொலைப்பார்வைக்கு குகை கோவிலாகவும், உருவம் அமைந்த உட்குகை அதன் மூலச் சிலையாகவும் தோன்றிற்று.
எல்லா வேலையும் முடிந்த பின் கில்லியட் தன் பாய்க் கப்பலைப் பாறைக்கிடையில் கொண்டுவந்து நிறுத்தினான். அவன் கப்பிகளின் மூலமும் வடங்கள் மூலமும் இயந்திரத்தை மெள்ளப்பாய்க் கப்பலின்மீது இறக்கினான். முன்பே இரண்டையும் அளந்திருந்ததனால், இயந்திரமும் சட்டமும் அதில் பொருந்தின. ஆனால் எதிர்பார்த்தபடி அவன் வெளியே வர முடியவில்லை. ஏனென்றால் அப்போது வேலியேற்றமா யிருந்ததால், டியூராண்டின் புகைப்போக்கி பாறையிலுள்ள மேலிட இடுக்கில் மாட்டிக் கொண்டது. தண்ணீர் மட்டம் தாழ்ந்த பின்பே அது இடுக்கிலிருந்து விடுபட்டு, அவன் வெளியேற முடியும். அதற்காக அவன் காத்திருந்தான்.