102
அப்பாத்துரையம் - 24
ஒரு சட்டம் அதைத் தடுத்து நிற்கக்கூடும். கிழக்கிலேயே வரவிருந்தது என்று அவன் உய்த்துணர்ந்தான். ஆகவே தான் செய்து முடித்த இரண்டு சட்டங்களில் ஒன்றைக் கிழக்கிலே மாட்டி ஒன்றை மேற்கில் முதற்சட்டமாக அடைத்தான்.
கிழக்கே கடலின் படையெடுப்புத் தொடங்கிற்று. இங்கே சட்டங் களின் உறுதி குறைவு. பாறைகளும் முன்னுள்ளவை போல உறுதியல்ல. ஆயினும் தெற்கும் மேற்கும் அடிக்கும் காற்றைவிட இங்கே காற்றுக் குறைவு. சட்டங்கள் அதைத் தாங்கிக்கொண்டன.
காற்று இறுதியில் மேற்கே அடிக்கத் தொடங்கிற்று. இவ்வாயிலில் சட்டம் ஒன்றுதான் இருந்தது. அது புயலின் தாக்குதலைத் தணித்தது. ஆனால் சட்டம் வளைந்து நெளிந்தது. புயலின் இடை டை ஓய்வில் கில்லியட் அவசர அவசரமாக தான் செய்த இரண்டாம் சட்டத்தை அண்டை கொடுத்தான். ஆனால் முதல் சட்டத்தைப் புயல் சிதைத்த பின் அதன் துண்டுகளே இரண்டாவது சட்டத்தைத் தகர்க்கும் உதைகுண்டுகளாயின. இரண்டாவது சட்டமும் தளர்ந்தது. எந்த நொடியிலும் புயலின் தாக்குதல் தன்னை அழிக்கலாம். தான் அரும்பாடுபட்டு இறக்கிய டியூராண்டையும் அதைத் தாங்கிய பாய்க்கப்பலையும் மூழ்கடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. தன் கப்பல் அழிவதானால், தான் அழிந்தபின் அழியட்டும் என்று அவன் தனக்குள் உறுதி செய்துகொண்டான்.கடைசிப் பேரலை ஒன்று பாய்க் கப்பலைப் பாறைமீது மோதிற்று. கப்பல் பாறையில் நேரடியாக மோதியதாகத் தெரியவில்லை. அதன்மீதிருந்த டியூராண்டின் சட்டமே மோதுதலின் பெரும்பகுதியை ஏற்றது. அதன் புறப்பகுதிகள் அகப்பகுதியிலிருந்து பிளவுபட்டு, கப்பலுக்குப் பாரமாய்த் தொங்கின.
புயல் ஓய்ந்துவிட்டது. ஆனால் பாய்மரத்துக்கு எந்த நேரமும் இடர் நேரக்கூடும் இரண்டாகப் பிளந்த டியூராண்டின் பகுதி அதன் சம நிலையைக் கெடுத்தது.ஆகவே கில்லியட் அவசர அவசரமாகக் கைக்கோடரி எடுத்துப் பிளவுற்ற பகுதியை முழுதும் வெட்டிப் பிரித்தான். இதனால் தொங்கிக் கொண்டிருந்த பகுதிகள் கடலில் வீழ்ந்தன. பாய்க்கப்பலின் பளுவும் குறைந்தது.
இப்போது வேலை முற்றிலும் முடிந்துவிட்டது. புறப்பட வேண்டிய குறை ஒன்றுதான். ஆனால் காலையில் புறப்பட்டால்