உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

101

அதற்குத் தப்பிப் பிழைக்க அந்நீர்ப் பரப்பில் அலைகளின் வேகத்தைத் தடுப்பது ஒன்றுதான் வழி என்று கில்லியட் கருதினான்.நீரிடுக்கினுள் அலைகள் மூன்று திசைகளிலிருந்து தான் வரமுடியும். ஏனெனில் ஒரு திசையில் மனிதப் பாறை ருந்து அதை அடைத்து விட்டது. அம்மூன்று வாயில்களுள், தெற்கிலுள்ள பாறையின் முன்வாயில் வழி ஒன்று. இதுவே தலைவாயில். மனிதப் பாறையருகில் கிழக்கிலும் மேற்கிலும் பாறை வரிசையில் இரண்டு இடைவெளிகள் இருந்தன. இவ்வாயில்கள் அலைகளுக்குமட்டும் அடைபட்டு, தண்ணீர் உள்ளே வர இடம் உண்டு பண்ணிவிட்டால், அலையின் வேகம் உள்ளே வராது. அதேசமயம் நீரின் வேகமும் குறையும்.இதற்கான ஏற்பாடுகளில் அவன் முனைந்தான்.

டியூராண்டின் சட்டங்களிலுள்ள பலகைகளை நீண்ட விரிச்சல் களாகப் பிளந்து அவற்றால் அவன் அலைமோது சட்டங்கள் உருவாக்கினான். ஆணிகள் மூலம் அவற்றை இரு பாறைகளின் வாயிலும் நீர்ப்பரப்புக்குச் சற்று மேலும் கீழுமாகப் பொருத்தினான். இரண்டு சட்டங்களால் முன்வாயில் அடைப்பட்டது. அதன் பக்கமாக முழு இடர் பாதுகாப்பு ஏற்பட்டது.கிழக்கு வாயிலிலும் அதுபோல் இரண்டு சட்டங்கள் அடைத்தான்.மேற்கு வாயிலிலும் அடைக்க முற்பட்டான்.

இரண்டாவது வாயிலின் சட்டம் முடிப்பதற்குள் வானம் முழங்கி விட்டது. முகில் வானை மறைத்து விட்டது. அடிவான எல்லைக்கு அப்பாலிருந்து புயல் உறுமிக்கொண்டுவந்து கடலில் அமளி செய்து பாறையைச் சுற்றி வட்டமிட்டது. அலைகள் மலைகளும் மலைக்கும் வண்ணம் எழுந்தலறிக்கொண்டு

லிடுக்கில் திருவிளையாடல் தொடங்கின. ஆனால் தெற்கு வாயிலின் சட்டத்தில் மோதி அலைகள் நொறுங்கின. ஆற்றலழிந்தது, நீர் உள்ளே சென்றது. புயலும் அலையும் மீண்டும் மீண்டும் படையெடுத்தன. கில்லியட்டின் மரக்கோட்டை முன் காற்றின் சம்பம் சாயவில்லை. இரண்டு மூன்று நாழிகைக்குப் பின் மீண்டும் அமைதி ஏற்பட்டது.

இவ்வமைதி திசைமாற்றத்துக்கான ஒரு ஓய்வு மட்டுமே என்று கில்லியட்டுக்குத் தெரியும். அடுத்த வீச்சு மேற்கிலிருந்து வந்தால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது. கிழக்கில் வந்தால்