(108
அப்பாத்துரையம் - 24
தனக்குரியதாகாவிட்டாலும் அதன் வாழ்வு பாழாக அவன் பார்க்க முடியவில்லை.
லெத்தியரி மணவினைக்கான ஏற்பாடுகள் செய்யும்படி கில்லியட்டிடம் கூறினான்.
கில்லியட் ஏற்பாடுகள் செய்தான். ஆனால் மணமகன் பயரைக் கில்லியட் என்று பதிவு செய்யவில்லை. காட்ரே என்று பதிவு செய்தான். அத்துடன் காட்ரே மறுநாளே வெளிநாடு செல்வதால், உடனே திருமணத்துக்குத் தனி இணக்கமும் பெற்றான்.
கப்பலில் ஏறுமுன் காட்ரேயுடன் டெரூசெட் கடற்கரை சென்றாள். அவள் தானும் தந்தையில்லம் விட்டு வருவதாகப் பிடிமுரண்டு செய்தாள். அவன் அவளைவிட்டுச் செல்வது தவிர வழிகாணாது திகைத்தான். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த கில்லியட் முன்வந்து, அவர்களைத் தானே மணம்செய்து அனுப்புவதாகக் கூறினான். காதலருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவர்கள் தம் நெருக்கடி நிலையில் அதை ஏற்றனர். திருமணம் உடனே கோயிலில் நிறைவேறிற்று."லெத்தியரி உடல் நலமின்மையால் வர முடியவில்லை. எனவே கில்லியட், அவருக்குப் பதிலாகவே நான் வந்திருக்கிறேன்” என்று கூறி அவன் கையெழுத்தைத் தானே இட்டு அதற்கான அத்தாட்சிக் கடிதமும் கொடுத்தான்.
கில்லியட் தாய் அவனுக்கு வரவிருக்கும் மனைவிக்காகக் கொடுத்த பரிசுகளடங்கிய பெட்டியை அவன் மணமக்களுக்குப் பரிசாகக் கொடுத் தான். இது உன் மனைவிக்கல்லவா கொடுக்க வேண்டும் என்றாள் டெரூசெட். "நான் இனி மணம் செய்யப்போவதில்லை” என்றான் அவன்.
காதலர்கள் அவனுக்காக வருந்தினர். டெரூசெட் தான் பனியில் அவன் பெயர் எழுதி அவனை நையாண்டி செய்த குறும்பையும், டியூ ராண்டைத் தேடிட அனுப்பிய அவசர ஆர்வ உரையையும் நினைத்து வருந்தினாள். காட்ரே, தன்னை கில்டாமரிலிருந்து காத்தவன் வாழ்வைத் தன் கையால் அழிக்க நேர்ந்ததே என்று வருந்தினான்.