பிறமொழி இலக்கிய விருந்து -2
109
காஷ்மீர் கப்பலில் காதலர் கைகோத்துக் கொண்டிருந்தனர். கப்பல் கில்டால்மர் கடந்துசென்றது. கில்டால்மர் மீது கடல் பொங்கி வந்து கொண்டிருந்தது. அதில் தான் இருந்த இடத்தில் மற்றொருவன் இருப்பதையும், அவன் நெஞ்சுக்கு மேல் தண்ணீர் ஏறிவிட்டதையும் கண்டு காட்ரே "ஆ" என்றான்.
டெரூசெட்டும் அவ்வுருவை நோக்கினாள்.“ஆ, கில்லியட்” என்றாள். கவலையற்ற அவள் உள்ளத்தில்கூட அவன் தியாகமும் பெருந்தன்மையும் ஆழ்ந்து பதிந்தன. இரண்டுகண்ணீர்த் துளிகள் அவள் கண்களிலிருந்து காட்ரே தோள்களில் விழுந்தன.
‘ஒரு கடல் மறவன் பெற்ற கன்னி நான். மற்றொரு உடல் மறவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கன்னியானேன்' என்று அவள் பெருமூச்சுவிட்டாள்.
கடல் மறவர் மரபுக்குத் தன் காதல் ஒரு களங்கமாயிற்று என்று காட்ரே எண்ணினான். அவ்வெண்ணம் அவன் கையினூடாகச் சென்று டெரூ செட்டின் கைகளை அழுத்திற்று.