122
அப்பாத்துரையம் - 24
நாற்றமும் வந்தடைந்திருக்கிறது. அதுவும் இத்தனையையும் அகற்றிய உழைப்பாளர் உழைப்புக்கு நன்றியாக.
அவன் மனம்கூடக் கசப்புற்றது.
பாட்டின் மூன்றாம் பகுதி, 'சோலை, சோலை, சோலை! என்பதை அவன் நினைத்துப் பார்க்க மறந்தான்.
இளைஞனாக வந்த வா. கை. 65 இப்போது கிழவன் ஆய்விட்டான். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு சிறையில் கழித்துவிட்டான். வெளியிலிருந் திருந்தால் இளந்தளிர் தழைப்பது போல, தழைத்து மலர்ந்து கனி வளந் தருவதுபோல, அவனும் மணவாழ்வு, மக்கள் மழலைச் சொல்லின்பம் பெற்று வாழ்வின் வளமும் பெருக்கமும் அடைந்திருக்கலாம். ஆனால் அவன் பாலைநிலக் கற்பாறையாக வாழ்ந்தான்.
வயதானதால் வா. கை. 65-க்கு இப்போது சாக்குத் தைக்கும் வேலை தரப்பட்டது. வேலை குறைந்தது, ஆனால் அவனுக்கு அதில் நன்றியுணர்ச்சி ஏற்படவில்லை. வெறுப்பாலும் மனக்கசப்பாலும் அவன் உள்ளமும் கல்லாய்ப் போயிருந்தது.
சிறையில் சமயப் பணி செய்யும் குருக்கள் ஒரு தடவை சிறைக்கு வந்தார். செய்த குற்றத்திற்கு வருத்தந் தெரிவிக்கும் கைதிகளையெல்லாம் விடுவிக்கும்படி அரசியலார்
தீர்மானித்திருந்தனர்.
மற்றக் கைதிகளெல்லாம், தாங்கள் குற்றம் செய்ததை ஒத்துக் கொள்வதாகவும், அதற்கு வருந்துவதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டனர்.
அவர்கள் விடுதலை செய்யப்படும்படி உத்தரவு வந்தது.
வா.கை. 65-னிடம் குருக்களுக்கு எவ்வளவோ இரக்கம் ஏற்பட்டது. இப்போது அவன் தண்டனைக் காலம் அரை நூற்றாண்டு கழிந்து ஐந்தாண்டு ஆகிவிட்டது. ஆனால் கைதியின் மனம் வயிரமாகியிருந்தது. அவன் தன் குற்றத் ைஒப்புக் கொள்ள விரும்பவில்லை. மன்னிப்புக் கோரவும் மனம் இடந்தரவில்லை. தன்னை இத்தனை நாள் அடைத்து வைத்து வதைத்தது குற்றமல்லவானால், தான் ஒரு மனிதனைக் கொன்றது என்றபடி குற்றமாகும் என்று அவன் உள்ளூரக் கேட்டுக்கொண்டிருந்தான்.