உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

123

அவன் கல் மனத்தை உடைப்பதற்காகத்தானோ என்னவோ அவன் பாதையில் கல் உடைத்துப் போட அனுப்பப்பட்டான்.

அவன் கல்லை உடைத்து நெடுநாளாயிற்று. முதலில் அவன் வேலையை விரைந்து, ஆனால் வெறுப்புடன் செய்தான். உடல் சோர்ந்தது. ஆனால் உள்ளத்தின் வெறுப்பும் உள்ளடக்கிய வெஞ்சினமும் அவனுக்குப் புதுத் தெம்பு தந்தது. உலகின்மீதுள்ள கோப முழுவதையும் உலகைப் படைத்த கடவுள்மீதுள்ள வெப்ப முழுவதையும் அவன் கல்லின்மீது காட்டினான்.

அவனுடன் பல தொழிலாளர் உழைத்தனர். கூலிக்கு உழைக்கும் அவர்கள் கூலியில்லாமல் அவன் உழைக்கும் வேகம் கண்டு நடுங்கினர்.

ஆனால் அவன் மனம் மெல்ல மாறிற்று.

வேறு

அவன் உடைத்தது சிறு கற்களை. ஆனால் பழைய பாறையருகில் பெருங்கற்களை உடைத்தனர் வேலையாட்கள்- அவர்கள் கூலிபெற்ற தொழிலாளர்களே. அவர்கள் வேலையில் மலை சமநிரப்பாகி வந்தது.

அழுக்கு மலையும் சேற்றுக்குழம்பும் இப்போது பாறையருகில் காணவில்லை. வெயிலில் சேறு வற்றிற்று, நாற்றம் அகன்றது. குளிர் காலந்தோறும் பனி அதைப் போர்த்து அதை மண்ணுடன் மண்ணாக்கிற்று, ஆனால் அழுக்கு நல்ல உரமாயிருக்கவேண்டும். பல களைகள், முள்செடிகள் அதில் வளர்ந்திருந்தன.

மலை உடைந்து நிலப்பரப்பாயிற்று. அழுக்கு மலை வளமான காட்டுப் புதராயிற்று. மலையின் கற்கள் உறுதியான வண்டிப் பாதைகளாகி, நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களை இணைத்தன.

அவன் உள்ளம் பாறையையும் சேற்றையும் மறந்தது.

தொழிலாளர் பின்னும் வேலை செய்தனர். புதர்க்காடு வெட்டித் தள்ளப்பட்டது. பாறை அகற்றப்பட்ட வெளியில் அதன் மண் தூர்த்துத் தள்ளப்பட்டது. அதில் படிப்படியாக நிழல் மரங்கள், பூஞ்செடிகள், காய்கறித் தோட்டங்கள் நிரம்பின. அது னிய சோலை வனமாயிற்று.