138
அப்பாத்துரையம் - 24
ஒருநாள் வழக்கம்போல அவன் கதவைத் தட்டினான். இம்பாரின் தடையை மீறி அவன் உட்சென்று அவளுடன் நயமாக, விடாப்பிடியாக மன்றாடினான். அச்சமயம் திரைமறைவில் காலடிகள் கேட்டன. வேட்டை விலங்கின் அரவங்கேட்ட புலியேறுபோல் அவன் நிமிர்ந்து நின்றான். சிலர் அவனைச் சூழ்ந்து கை ஓங்கத் தொடங்கினர். அடுத்த கணம் அவர்களே திடுக்கிட்டனர். அவன் கைக் குத்துகள் அவர்களை அண்டவிடாமல் துரத்தின.
அவன் கண்களில் அனல் தெறித்தது. ஆனால் இம்பாரின் பக்கம் அவன் கண் சென்றதும், அதன் நிறம் மாறிற்று. அவன் அவளைப் பற்றி இழுத்து முத்தமிட முயன்றான். ஆனால் இம்பார் அவனுக்குப் பிடி கொடுக்காமல் விலகியதுடன், அவன் கன்னத்தில் தன் மெல்லிய கரத்தால் ஓரடி அடித்தாள். அவன் அவள்மீது சீறவில்லை. புன்னகையுடன் அதை வரவேற்று, “இது நம் முதல் தொடர்பு. இதுவே என் உரிமையின் முதல் சின்னம்” என்று கூறித் திரும்பினான்.
திரும்பும் வழியில் இம்பாரின் தந்தை ஜக்ரிஸ் நின்று அவனைத் தடுத்து, “இங்கே, அவ்வளவு எளிதாகத் தப்பி விடலாம் என்று நினைக்காதே; என் குடும்பத்தின் எல்லையில் வந்து எங்களை அவமதித்ததற்குச் சரியான தண்டனை பெறாமல் உன்னை விடமாட்டேன்” என்றான்.
அவனையும் அறியாமல் அவன் குடும்ப மரபின் பகைமை செயலாற்றிற்று. அவன் தன் காதல் நங்கையின் தந்தை என்பதை அவன் மறந்தான்! அவன் இளமை, வீரத்தின்முன் முதுமை வாய்ந்த ஜக்ரிஸ் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று.
து-
“என் காதலுரிமையில் குறுக்கிட்டதற்கு இது ஒரு குத்து. மறைந்து நின்று வஞ்சகமாக ஆட்களை ஏவியதற்கு இது-ஒரு இடி. என் தந்தையை ஆள்விட்டு அடித்த கோழைமைக்கு இது-ஒரு அடி. என் தந்தையைக் கொன்ற பழிக்கு இது-ஒரு உதை. உன் செல்வ இறுமாப்புக்கு இது-ஒரு குத்து. இவ்வாறாக இடியும் உதையும் குத்தும் சரமாரியாகப் பொழிந்தன.
பழிக்குப்பழியாக அவன் ஜக்ரிஸைக் கொன்றிருப்பான். இம்பாரின் அழுகையும் அவள் இடையே வந்து தடுக்க