(140
அப்பாத்துரையம் - 24
தடுத்தது. கடிதங்களைக் கிழித்தெறிந்துவிட்டுச் செயலற்றிருப் பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.
அவன்
தன்
கானாற்றின் நீரோட்டத்தினிடம் மனக்குறைகளைத் தெரிவித்தான். மலங்காற்றைத் தூதாக அனுப்பினான்.அவள் இருக்கும் திசைநோக்கித் தவங்கிடந்தான். அவள் காணக்கூடும் நிலாச் செல்வனிடம் தன் கண் பார்வையைச் செலுத்தி, அதில் அவள் மதி முக நிழலை உருவகித்துப் பார்த்து மகிழ்ந்தான்.
இவை தவிர அவனுக்குச் செய்வகை எதுவும் தென்படவில்லை.
அவன் தனியே ஒதுக்குப்புற இடங்களில் திரிவான். தனி இடங்களில் நீண்டநேரம் இருப்பான். தனி மொழிகள் கூறுவான். அல்லது வழியில் நின்றும் வேற்றிடங்களில் நோக்கியும் தன்னை மறந்திருப்பான். இவை ஊர்ப்பேச்சை வளர்த்தன. ஆனால் அவன்முன் எல்லாரும் அஞ்சினர். அவனைவிட்டு எல்லாரும் கூடியமட்டும் விலகிச் சென்றனர்.
காதலால் எப்படியும் நெடுநாள் செயலின்றி இருக்க முடியாது.ஓலா மீண்டும் இம்பாரைக் காண முற்பட்டான். ஆனால் இத்தடவை அவன் ஒளித்துச் செல்லவில்லை. பலர் ஆறிய ஆற்றில் படகேறிக் கடந்தான். தான் செல்லுமிடமும் நோக்கமும் எல்லாருக்கும் ஐயத்துக்கிடமில்லாமல் தெரியும்படி மெள்ள பலதடவை முன்பின் வந்து திரும்பி, சுற்றுவழிகளில் உலாவிச் சென்றான். அவன் எதிர்பார்த்தது- துணிந்து எதிர்பார்த்தது- நடந்தது. ஊரார் சூழ்ந்து அவனைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். எண்ணிக்கை அவனுக்கு எதிராக இருந்தது. அவன் அடிபட்டுத் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால் இத் தோல்வியிலும் வெற்றி இருந்தது. இம்மாதிரி வெற்றி ஊருக்கு மதிப்பல்ல; என்றும் அதைக் கையாளவும் முடியாது. ஏனென்றால் அவன் நாள்தோறும் இதையே திருப்பித் திருப்பிச் செய்ய முற்பட்டான்.
அவன் வீட்டின் விலையுயர்ந்த பொருள்கள் பல அடிக்கடி காணாமற் போயின. அவற்றின் அளவு குறைந்தது. புதிய புதிய உருப்படிகள் வாங்கப் பட்டன. ஆனால் அவையும் வெளியேறிச்
ய