உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

141

சென்றன. எல்லாம் இம்பாரை அடைந்தன என்று கூறத் தேவையில்லை. அவன் தாக்குதல் இம்பாரின் பகைமைக் கோட்டையையும் சீற்றக் கோட்டையையும் துளைத்திருந்தது. இப்போது ஊரடக்கி, ஊரறிய வரும் ஆரவாரக் காதலனை அவள் முற்றிலும் வெறுத்துத் தள்ளத் துணியவும் இல்லை; விரும்பவும் இல்லை. பரிசுகள் இதனாலேயே வரவேற்கப்பட்டன.

ஜக்ரிஸின் சீற்றம்மட்டும் இன்னும் மாறவில்லை. ஓலாவின் வல்லமைக் கெதிராகத் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென்பதை அவன் அறிவான். ஆனால் வெளிப்படையாக அவன் முன்னேறி வருவதைத் தடுக்கா மலிருப்பது தன் குடும்பத்திற்கு அவமதிப்பு என்று அவன் எண்ணினான். ஆகவே குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிபோல அவன் தன் வீட்டைக் காக்க நினைத்தான். இக்காரணத்தால் அடிக்கடி அவன் ஓலாவைக் காண நேர்த்தது. ஒரு தடவை அவன் தன்னாலியன்ற மட்டும் தடுக்க முயன்றபோது மும்முரமான சண்டை ஏற்பட்டது. மறுபடியும் ஓலா தன்னை மறந்தான். ஜக்ரிஸைக் கையால் தூக்கி எடுத்து ஆற்றில் எறிந்து விடலாமா என்று நினைத்தான்.

ஜக்ரிஸ் இச்சமயம் தன் வலுக்கொண்டமட்டும் அவனைக் கடிக்கத் தொடங்கினான். ஓலா அவனை இறுக்கிப் பிடித்து அழுத்தினான். கிழவன் வலிதாங்கமாட்டாமல் அலறினான். அத்துடன் காலைத் தூக்கி அவனை உதைத்துத் தள்ளிவிடவும் முற்பட்டான். இச்சமயம் ஓலா அவனைக் கொல்லவே இருந்தான். இம்பாரும் அவள் தாயும் எதிர்ப்பட்டதால் அவன் தப்பினான். ஆனால் அவன் விட்டாலும் ஜக்ரிஸ் விட்டபாடில்லை. இன்னது செய்வதென்று தெரியாமல் அவனைச் சிறிதுநேரம் அங்குமிங்கும் எலியைப் பூனை ஆட்டி அலைப்பதுபோல் அலைத்து இறுதியில் சூட்டப்பத்திற்காக அரைத்து வேம்பானையில் வேகவிடப் பட்டிருந்த மாவில் அவனைத் திணித்து வைத்துவிட்டுச் சென்றான்.

மற்றுமொருமுறை இம்பாரின் பக்கம் நாடமுடியாத நிலை அவனுக்கு ஏற்பட்டது.

சீற்றத்தால் தன் காரியத்தைத் தானே கெடுத்துக் கொண்டு விட்டதை எண்ணி அவன் தன்னைத்தானே கடிந்து கொண்டான்.