பிறமொழி இலக்கிய விருந்து -2
எண்ணினேன்.
இரண்டுக்கும்
66
159
என்னிடம் துளியேனும்
துணிவில்லை. டேவிடிடமே என்ன செய்யலாம்?" என்று
கேட்டேன்.
"பிறர் அறிவுரையை நான் கேட்பதுமில்லை. பிறருக்கு அறிவுரை கூறுவதுமில்லை; இனிக் கூறப்போவது மில்லை' என்று அவன் வெட்டிப் பேசிவிட்டான்.
அறிவுடையவர்கள் தானாக வழி காண்பார்கள், பிறர் அறிவுரையை நாடமாட்டார்கள் என்ற அவன் மதிப்புரை என் நெஞ்சைக் கருக்கியது. நான் தனித்திருந்து ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தேன். இறுதியில் இதை யாருக்காவது நன்கொடையாகவே வழங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். 'ஏழையாகப் பார்த்துக் கொடுத்தால், அவனிடம் அது அதிக நாள் தங்காது. விரைவில் விற்றுச் செலவு செய்துவிடுவான். வீட்டுக்கும் விபரம் தெரியாமற் போய் விடும்' என்று என் மனம் ஒத்தூதியது. நான் துணிவு பெற்றேன்.
துணிவு செயலாக மாறிற்று. வெளியே இறங்கினேன்; என் எதிரே கந்தலாடை போர்த்திய ஒரு சிறுவன் காணப்பட்டான். அவன் என் வகுப்பிலே உடனிருந்து படித்தவன். எனவே எனக்கு அறிமுகமானவன்.
"அடே தம்பி, இங்கே வா!" என்று அச்சிறுவனைக் கைகாட்டி அழைத்தேன். அவன் என்னவோ, ஏதோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டே என்னருகில் வந்தான். கடிகாரத்தைக் காட்டி, "இந்தா, இதை உனக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். பெற்றுக்கொள்” என்று கூறினேன்.
பையன் கடிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தான். வாங்கிப் பார்த்தான். ஆனால் அதை அவன் தன்னிடமே வைத்துக் கொள்ளவில்லை. திருப்பிக் கொடுத்துவிட்டான்.
66
"ஏன், உனக்குத்தானே தந்தேன், சும்மா எடுத்துக்கொள்'
“எனக்கா?”
“ஆமாண்டா ஆமா; உனக்கேதான்!”