(160
அப்பாத்துரையம் - 24
பையன் இன்னும் பரக்கப்பரக்க விழித்துக்கொண்டிருந் தான். நான் அவன் கையில் கடிகாரத்தைத் திணித்து விட்டுப் பேசாமல் வந்துவிட்டேன்.
நான் டேவிடைக் கண்டு இச்செய்தியைக் கூறினேன்.அவன் அந்நேரம் தலை கோதிக் கொண்டிருந்தான். சீப்பைத் தலையில் செருகிக் கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தான். முகத்தில் வியப்புக் குறி காணப்பட்டது. சீப்புச் சட்டென்று நழுவிக் கீழே விழுந்தது.
என் செயலுக்கு ஒரு விளக்கம் தேவை என்று எனக்குப்பட்டது.
66
‘பையன் அதை விற்று ஏதேனும் வாங்கிக்கொள்வா னல்லவா?” என்றேன்.டேவிட் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. விளக்கத்தை ஏற்றுக் கொண்டதாகவும் காணவில்லை. பேசாது வெளியே சென்று விட்டான்.
என் செயலில் எனக்குச் சற்றுமுன் ஏற்பட்டிருந்த மன நிறைவு, அமைதி குலைந்தது. போதாக்குறைக்கு ஒரு பித்தளைக் கடிகாரத்தை அன்பளிப்பாகப் பெற்ற மற்றொரு பையன் அதை வைத்துப் பள்ளியில் வீம்படித்துக்கொண்டிருந்தான். பலர் அவனைச் சூழ்ந்துகொண்டு இன்னும் மிகைப்படுத்திப் பேசினர். இது என் செயலின் ஏமாளித்தனத்தைக் கேலிசெய்வது போலிருந்தது.எப்படியாவது செய்துவிட்ட பிழையைத் திருத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். ஏனெனில் ஒரு பைத்தியக் காரத்தனமான செயலைச் செய்து, நான் டேவிட் போன்ற நன்மதியாளர் மதிப்பை இழந்துவிட்டதாக எண்ணினேன்.
ஏழைக்குக் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பக் கேட்பதும் சரியல்ல. ஆனால் கடிகாரத்தை எப்படியும் திரும்பப் பெற்றாகவேண்டும். எனவே நான் சேமித்து வைத்த தொகையிலே ஐந்து வெள்ளிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தப் பையனை நாடிப் புறப்பட்டேன். பையன் அதை விற்கத் தானே செய்வான். அதற்குள் இந்த நல்ல தொகையைக் கொடுத்து நானே வாங்கிவிட எண்ணி விட்டேன்.