உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

161

பையனின் தந்தை ஏழை. ஆனால் கெட்டுவிடக் கூடாதென்ற எண்ணமுடையவர். அவர் குடிசை, நடையுடை பாவனை எல்லாம் ஏழ்மை, புறமதிப்பு ஆகியவற்றிடையே நிகழும் போராட்டங்களுக்குரிய சின்னங்களாகவே இருந்தன. அவர் பையன் அன்பளிப்பாகப் பெற்றானென்று நம்பாமல்,திருடினான் என்று அவனைக் குற்றஞ்சாட்டி விட்டார். அதனால் இப்போது நான்தான் பரிசாகக் கொடுத்தேன் என்பதையும் நம்ப மறுத்து விட்டார்! நான் சற்று விழித்தேன். பின் “பரிசைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. அதற்குரிய பணம் தந்து மீட்டுப் போகத்தான் வந்திருக்கிறேன்” என்றேன்.

என் பொருளுக்கு நான் தரும் விலையைப் பெறுவது தகாது என்ற எண்ணம் அவர் மூக்குக் கண்ணாடிக்குள்ளாக நிழலாடியது. கடிகாரத்தை அவர் கீழே வைத்தார். பணத்தை எடுக்க மனமில்லாதவர் போலக் கைமறித்துக் காட்டினார். இதற்குள் உள்ளிருந்த பையனின் தாய் “உங்களுக்குப் பணத்தின் அருமை தெரிகிறதா? கடிகாரத்தைக் கூட நான் கூறியபடி அன்றே விற்றிருக்கலாம்” என்றாள். அவள் பக்கம் சற்றுக் கடுமையோடு பார்த்துக்கொண்டே, பையனின் தந்தை வெட்கத்துடன் பணத்தை எடுத்துக் கொண்டார்.

கடிகாரத்துடன் நான் வெற்றிகரமாக வீடு திரும்பினேன்.

கடிகாரத்தைத் திரும்பப் பெற்றதை நெடுநாள் நான் டேவிட்டிடம் கூறவில்லை. அவனாகவே ஒருநாள் அதைக் காண நேர்ந்துவிட்டது.

"நீ தவறாகக் கருதாதே, டேவிட்! இதை நான்...'

நான் கூறி முடிப்பதற்குள் “அது உன் கடிகாரம் உன் பரிசு. அதை நீ என்ன செய்தால் எனக்கென்ன?” என்று ஒட்டறுத்துக் கூறினான் அவன்.

கடிகாரத்தை முதலில் அதன் பயன் தெரியாத ஒருவனிடம் கொடுத்தது பைத்தியக்காரத்தனம். இப்போது அதைத் திரும்பப்பெற்றது சிறுமை என்று டேவிட் எடுத்துக்காட்டுவது போலிருக்கிறது. இனி தக்க இடம் பார்த்துக் கொடுக்கவேண்டும் என்று எண்ணினேன். இழந்த மதிப்பை மீண்டும் பெற என் உள்ளம் துடித்தது. எங்கள் வீட்டு வேலைக்காரச் சிறுவன்