162
அப்பாத்துரையம் - 24
யுஷ்காவுக்கு அதை மீண்டும் பரிசளித்தேன். அவன் மறுத்தான். நான் வற்புறுத்திக் கொடுத்தேன். அடுத்த தடவை நான் டேவிடை அணுகிய போது அவன் புத்தகம் புரட்டிக் கொண்டிருந்தான். புரட்டியபடியே நான் கூறியதைக் கேட்டான். இப்போதும் அவன் முன் கூறியது போலவே “கடிகாரம் உன்னுடையது. நீ அதை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று தான் கூறினான். ஆனால் சொற்கள் பழைய சொற்களானாலும், தொனியில் பெருத்த வேறுபாடு இருந்தது. என் இறுதிச் செயலால் என்மீது அவனுக்கிருந்த அவமதிப்புப் பாதியளவாகக் குறைந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.
கடிகாரத்தின் கதை தொடங்கியபின் முதல் தடவையாக என் மனத்தில் அமைதி நிலவிற்று. டேவிடும் நானும் முன்பு இருந்ததைவிட நெருங்கிய நண்பர்களானோம். இச்சமயம் சிற்றப்பா யெகோரும் புதிய அரசியலாரால் விடுதலை பெற்றுத் திரும்பிவரக் கூடும் என்ற நம்பிக்கைக்கு இடமேற்பட்டிருந்தது. இப் புத்தவா எங்கள் புது நட்பின் மீது தன் இனிய நிலவொளியைப் பரப்பிற்று.
பூனைமீது எலி பாய்வதுபோல ஒருநாள் அத்தை என் மீது பாய்ந்தாள்."அடே குறும்புக்காரப் பயலே! உன் அப்பன் மாடியில் உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான், போ! உன் குறும்புக்கேற்ற பரிசு காத்துக்கொண்டிருக்கிறது!” என்று அலறினாள்.
நின்று
செய்தி இன்னதென்று அறியாமல், நான் கால்நடுக்கத்துடன் சென்றேன். யுஷ்கா அங்கே நடுக்கத்துடன் கொண்டிருந்தான்.
"அடே! நீ கடிகாரத்தை யுஷ்காவுக்கா கொடுத்தாய்?” என்று குமுறினார் தந்தை. என்றும் அனல் கக்காத எரிமலை இன்று கனல் கக்கத் தொடங்கியிருந்தது.
நான் பேசாது யுஷ்கா பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
"சொல்லுடா! அவனை ஏன் பார்க்கவேண்டும்?” என்று மீண்டும் அதட்டினார்.நான் அஞ்சிக்கொண்டே,“ஆம்” என்றேன்.