பிறமொழி இலக்கிய விருந்து -2
163
ஆந்தையறைந்தால்போல் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. கை கன்னத்தில் பதிந்து தடமெழுந்தது. நான் அழவில்லை. ஆனால் அந்த அடி என்னை அரையுணர்வாக்கி விட்டது.
புயல் இப்போது யுஷ்கா பக்கம் திரும்பிற்று.
“அவன்தான் கொடுத்தான். அதை விற்க என்ன திமிரடா உனக்கு?” என்று அவர் யுஷ்காவை நோக்கிச் சீறினார். ஆனால் அவர் கோபம் இதற்குள்ளாகத் தணிந்து போய்விட்டது. அவருக்கு முன்கோபம் உண்டு. ஆனால் கோபம் அவரது இயல்புக்கே மாறானது. முன்கோபத்தின் சீற்றத்தை யடுத்து அவருக்கு உடம்பில் உதறல் எடுக்கும்; கழிவிரக்கம் உண்டாகும். இப்போதும் விரைவில் அச்சின்னங்கள் தோன்றலாயின. அவர் பெருமூச்சு விட்டுக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.
அத்தை அவரை மீண்டும் சினமூட்ட முயன்றாள். ஆனால் அவர் எரிச்சல் அவள் மீதே பாய்ந்தது. "இந்தக் கேடுகெட்ட கடிகாரத்தால் நேர்ந்த இடர் இவ்வளவு போதும். இன்னும் புயலைக் கிளப்பாதே" என்று கூவி இரைந்தார்.
னி
அத்தை முணுமுணுப்புடன் கறுவிக்கொண்டாள். “சரி, சரி. இந்தக் கடிகாரம் இனி இந்த நன்றிகெட்ட பயலுக்கு வேண்டாம். வேறு நல்லவர் யாருக்காவது கொடுத்து விடுகிறேன்” என்று முனங்கிக்கொண்டே அதை எடுத்துச் சென்றாள்.
அத்தை அந்தக் கடிகாரத்தை யாருக்குக் கொடுக்க எண்ணியிருக் கிறாள் என்பது எனக்குத் தெரியும். நாஸ்டஸியைப் போலவே அவனும் அவளுக்குப் பிடித்தமான ஒரு சில தவறு களுள் ஒருவன். அவன் பெயரும் நெடு நீளமாக, அருவருப்பாகவே இருந்தது; ஃரிஸான்ஃவ் லூக்கிச் ட்ராங்க்வில்லிட்டாட்டின் என்பது அவன் பெயர். நாஸ்டஸியைப் போலவே அவனையும் அத்தை அடிக்கடி எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து தாக்காட்டிக்கொண்டிருந்தாள். 'எதற்கு' என்று கேட்பவர்களுக்கு அவள் "பிள்ளைகள் படிப்புக்கு மிக்க உதவியாயிருப்பான்" என்பாள். உண்மையில் நாங்கள் கற்றுக் கொடுத்தால் கூட அவன் மண்டையில் கடுகளவும் ஏறாது. அவன் ஒரு இடுதடியன்;