(166) ||__ __
அப்பாத்துரையம் - 24
பேசாமல் நூல் பின்னல் பின்னிக்கொண்டே அவள் எங்களுடன் இருப்பாள்; அந்நிலையிலேயே நாங்கள் மகிழ்வுடன் நேரம் போக்குவதுண்டு. ஆனால் குடும்பநட்பு முறிந்தபின் அவளும் வருவதில்லை; நாங்களும் அத்திசை நாடக்கூடாதென்ற கட்டுப்பாடு ஏற்பட்டது. நான் இதற்கு இணங்க வேண்டிய தாயிற்று. ஆனால் டேவிட் இதனை மதிக்க வில்லை. அவன் ரயீஸா வீடு செல்வான்; ரயீஸாவும் வேலியண்டை நின்று அவனை வரவேற்கத் தவறுவதில்லை. இருவரும் வேலிக்கப்புறமும் இப்புறமும் நின்று நெடுநேரம் பேசுவார்கள். அவர்கள் நட்பு அவ்வளவு இணைபிரியாத தாயிருந்தது.
தந்தையின் ஒத்துழைப்பின்றி லாட்கினின் அறிவும் அனுபவமும் பயன் பெறவில்லை. வறுமை அவரைப் பிடுங்கித் தின்னத் தொடங்கிற்று. அத்துடன் அவர் திண்ணிய உடல் வாதத்துக்கு இரையாகிக் கிட்டத்தட்டச் செயலிழந்தது. அவர் மூளை முன்போலவே சுறுசுறுப்பாயிருந்தது. ஆனால் மூளையின் ஒலிநாளங்களில் வாதக்கூறு காரணமாக ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர் சொற்களையெல்லாம் ஒன்றுக் கொன்றாகத் தலைமாற்றிக் கேட்பவர்க்குப் பெருங்குழப்பம் உண்டுபண்ணி வந்தார். அவர் பேச்சு கேட்பவருக்கு மலைப்பைத் தரும் ஒரு புதுத் தனிமொழியாயிருந்தது. ஓரளவுக்கு இதைரயீஸா புரிந்துகொண்டு வந்தாள். 'கத்தி' என்பது அவர் மொழியில் ஆப்பத்தின் பெயர். கசாப்புக் கடைக்காரன் என்பது என் தந்தையைக் குறிக்கும் சொல். வழக்கமான இம்மொழி பெயர்ப்புகளின் உதவிகூட ரயீஸாவுக்குச் சில சந்தர்ப்பங்களில் பயனற்றுப் போய்விடுவதுண்டு.
ரயீஸாவின் தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாள். அவள் தங்கையோ அறிவு மந்தமான ஊமை அவள் எந்த வேலையும் செய்வதில்லை. அத்துடன் எவரும் உரத்துப் பேசவோ, சிரிக்கவோ செய்தால் அவளுக்குப் பொறுக்காது. இது தவிர அண்டை அயலார் அல்லது வேறு யாராவது குறும்பர் அவள் காரியத்தில் தலையிட்டு, அவளை நையாண்டி செய்து வதைத்துவிடாமல் தடுக்க, அவளை எப்போதும் யாராவது ஒருவர் பாதுகாத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் குடும்பப் பொறுப்பின் பெரும் பகுதியும், தாய், தந்தை,