உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

167

தங்கை ஆகிய யாவரையும் பேணும் கடமையும் ரயீஸா ஒருத்தி தோளிலேயே விழுந்தது. கடன்காரர் தொல்லைகளையும் அவளே சமாளித்துக்கொள்ள வேண்டும். டேவிட் தான் அவளுக்கிருந்த ஒரே நண்பன். அவனிடம் தன் அல்லல்களைக் கூறி அவள் அடிக்கடி ஆறுதலும், அறிவுரையும் ஒரு சில சமயங்களில் இன்றியமையா உதவியும், ஒத்துழைப்பும் பெற்றுவந்தாள்.

ஒருநாள் ரயீஸா தன் தாய் திடீரென்று இறந்துவிட்டாள் என்ற செய்தியுடன் வந்தாள். உடலை அடக்கஞ் செய்யத் தாயின் திருமணப் புடவையை விற்கவேண்டியிருந்தது. அதில் கிடைத்த தொகை பன்னிரெண்டு வெள்ளிகள்தான். இதைக் கொண்டு பிணப்பெட்டிக்கு ஏற்பாடு செய்யச் சமையற்காரியையே அனுப்பவேண்டியிருந்தது. சமையற்காரி அந்தப் பணத்தைக் குடித்துத்தீர்க்காதிருக்கும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ரயீஸா டேவிடிடம் ஒப்படைத்தாள்.

மற்றொரு சமயம் விறகுக்குப் பணமில்லாமல் காட்டிலிருந்து வேலையாள் விறகு வெட்டிக்கொண்டு வந்தான். விறகு தூக்கிக்கொண்டு வந்த சுமையாள் தனக்குரிய கடனுக்காக அந்த விறகை எடுத்துக் கொண்டான். ரபீஸா கூறிய இத்துயரங்களைக் கேட்டு டேவிட் உருகினான். ஆயினும் அவன் அவளை ஊக்கப்படுத்தித் தன் மனஉறுதியை அவளுடன் பங்கிட்டுக் கொண்டான்.

டேவிட்டுக்கும் ரயீஸஃாவுக்குமிடையே உள்ள நட்பு மிக நெருக்கமானது என்றும், மேன்மேலும் வளர்ந்து கொண்டே வருவது என்றும் எனக்குத் தெரியும்.ரபீஸாவிடம் எனக்குக் கூட நேசமிருந்தது. ஆனால் நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகவில்லை. ஆனால் டேவிட் அவள் குடும்பத்துக்கு உதவுவது அவன் பெருந்தன்மைக்குரிய சின்னம் என்றுதான் கருதியிருந்தேன். ஆயினும் அவன் பேச்சிலிருந்தே ஒரு நாள் அவன் உள்ளக் கிடக்கையை நான் கண்டு கொண்டேன்.

சிற்றப்பா திரும்ப வீடு வருவது பற்றிப் பேசிக் கொண்டி ருந்தோம். தன் தந்தை வருவது பற்றியும், இந்தப் பாழும் ரயாஸானை விட்டு நீங்குவது பற்றியும் டேவிட் எழுச்சியுடன்