உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

183

தெய்வமாகவும் விளங்கினாள். அவள் ஆட்டிவைக்கக் கணவனும் காதலனும் ஒருங்கே ஆடினர். இருவரும் அவளிடம் குறைகாண முடியவில்லை. உலகமும் அவளைப் போற்றவே செய்தது.

அவன் உள்ளத்தில் இத்தனையும் நிழலாடின. இன்பமும் துன்பமும் கலந்த காட்சிகள் படக்காட்சித் திரையில்

ஓடுவதுபோல் ஓடின கணவன் பார்க்க முடிந்ததோ

முடியவில்லையோ, அவள் வெல்ச்சானினாவின் கண்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்- பாம்பாட்டியினுடைய மகுடியின் அசைவைப் பின்பற்றும் பாம்புபோல் அவள் அவ் விழிகளில் இலயித்திருந்தாள்.

பல ஆண்டுகள் அவன் கழுத்தைச் சுற்றிப் பொன்னாரம் போல் வளைத்த தளிரிளங் கைகள்- 'அதோ கணவன் வருகிறான்’ என்று கூறி அச்சுறுத்தி நடுங்கவைத்துப் பின் அணைத்து மகிழ்ந்த அந்தக் குறும்பு நகைமுகம்- அவன் நாடி நரம்புகளின் துடிப்பாக வெளியே நின்று துடித்த அந்த மாய உயிர்ப்பாவை இப்போது மண்ணைக் கவ்வினாள்.

ஆம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. கடைசியில் அவள் அவனை வெளியே வலியத் தள்ளினாள். பீட்டர்ஸ்பர்க்குக்கு அவள்தான் அவனை அனுப்பினாள். திரும்பி வரவேண்டாமென்று எச்சரிக்கவும் செய்தாள். அவளுக்குத் தன்னால் ஒரு குழந்தை பிறக்கப்போகிற தென்றும், அது தெரிவதற்கு முன்னால் போய்விட வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். வெல்ச்சானினாவ் போக விரும்பவில்லை. அது பொய்யான சாக்குப்போக்கு என்று அவன் நினைத்தான். ஏனெனில் ஸ்டெப்பான் மிஹலாவிச் பாகுட்டாவ் என்ற செல்வ இளைஞனிடம் அவள் மனம் சிறிது திரும்பியதாக அவனுக்குத் தோன்றிற்று. ஆயினும் அவள் சொல்லையும், அவள் அதன்பின் பீட்டர்ஸ்பர்க்குக்கு எழுதிய கடிதத்தையும் அவனால் புறக்கணிக்கவே முடியவில்லை. வேண்டா வெறுப்பாக அவளை மறக்க நினைத்து- திறமையினால் கிட்டத்தட்ட மறந்து ஒன்பது ஆண்டுகளைக் கழித்தாய் விட்டது. கறுப்புநாடா வந்து இப்போது மீண்டும் அவன் அமைதியை- போலியாயினும் ஓரளவு பொருந்தியிருந்த அமைதியைக் கலைத்தது. அத்துடன் இப்போது அவள் இறந்துவிட்டாள். முன்பே இவனைப் பொறுத்தவரையில்