184
அப்பாத்துரையம் - 24
ய
அவள் இறந்தவளாகவே இருந்தாள். இப்போது உலகுக்கும் - கணவனுக்கும் - எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய காதலனுக்கும் அவள் மீண்டும் இறந்து போய்விட்டாள்.
புதிய காதலன் யார்? மிஹலாவிச்சேதான்! கணவன் மனைவியைப்பற்றி அளக்கும்போது அவனைப்பற்றியும் அளந்தான். உண்மையில் அவர்கள் தொடர்பு பற்றி வசை புதைந்த கேலிக்குறிப்புக்களை அவன் வெட்கமில்லாமலே கூறினான். தன் தொடர்பு பற்றி அவனுக்குத் தெரியுமோ, தெரியாதோ அறிய முடியவில்லை. உண்மையில் அவன் ஆழம் பார்க்கவே வந்திருக்கக் கூடும். யார் அறிவார்கள்? ஆனால் அவள் இருக்கும்போது அவனுக்கு இல்லாத ஆராய்ச்சி, அவள் இறந்துவிட்ட பின் இப்போது எதற்கு? அதுவும் யார் கூற முடியும்! ஒருவேளை அதன் காரணமாக, ஆறுதலை நாடியே அவன் வந்திருக்கவும் கூடும்!
வெல்ச்சானினாவ் அவனை வெறுத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைப் பாவ்லோஸ்கியின் பக்கம் தள்ளியது. அவன் சமூகப்படியில் தாழ்ந்த நிலையில் இருப்பவன். அவனாக வெல்ச்சானினாவை அணுகவோ, அவன் பழக்கத்தைப் புதுப்பிக்கவோ மாட்டான். ஆனால் வெல்ச்சானினாவ் உணர்ச்சி வசப்பட்ட சமயத்தில் அவன் தன்னைப்பற்றிய தகவலைக் கூறிவந்தான். அவனை விரைவில் அனுப்பி விடுவதற்காக வெல்ச்சானினாவ் "நாளை வந்து உன்னைக் காண்கிறேன். இப்போது நான் ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றான்.
பாவ்லோவ்ஸ்கி அச்சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு முகவரியைக் குறிப்பிட்டுக் கூறினான். ஆனால் இனிமேல் அவன் திரும்பிவரவே மாட்டானென்றே ஐயுற்றான். உண்மையில் மறுநாள் வெல்ச்சானினாவ் தன் மதிப்பை விட்டு அமைதியை மறந்து அவன் இருந்த அழுக்கடைந்த நகர்ச்சேரியில் நுழைந்து அவன் அறையில் நின்றான்.
அறைக்குள் நுழையும்போதே அவன் ஒரு குழந்தையின் அழுகைக் குரலையும் அதனை அடக்க முயலும் ஒரு முரட்டுக் கூச்சலையும் கேட்டான். அடங்கிய அழுகை விம்மலும் விக்கலுமாகத் தேம்பித் தேம்பிக் கேட்பவர் உள்ளத்தைத் துணுக்குற வைத்தது. காட்டுப் பூனையின் கையில் சிக்கிய