உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

187

"உங்களுக்குத் தெரியுமே, நடல்யா தன் குடும்பத்தை விட்டுவிட்டு என்னை மணந்துகொண்டாள். அவள் உறவினர் ஒருவரும் எங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் துணியவில்லை. எனக்கோ உறவினர் எவர் உதவியும் கிடையாது. நீங்கள், மிஹலாவிச் போன்ற நண்பர்களை நெருங்கும் நிலையில் நான் இல்லை. என்ன செய்வது நல்ல குடும்பங்கள் ஏற்றால்...!” “அப்பா!”

குரல் கேட்டு வெல்ச்சானினாவ் திடுக்கிட்டுத் திரும்பினான். “எனக்கு நீங்கள் போதும் அப்பா!'

பாவ்லோவ்ஸ்கி உறுமினான். “உன்னை யார் கேட்டது. போய், உள்ளேயிரு!" பின் அவன் பேசினான். “நல்ல குடும்பத்தில் அதைப் பழகவிட்டால் நல்லது என்று நினைக்கிறேன். தங்களிடம் அதற்காகத்தான் வர எண்ணினேன். துணிவில்லை!” இந்தப் பேயிடமிருந்து எப்படியும் தன் ஒரே செல்வத்தை -தன் லிஸாவை

மீட்கவெல்ச்சானினாவ் எண்ணினான்.

"பாவ்லோவ்ஸ்கி, கிளாவ்டியா பெட்ரோவ்னா எனக்குத் தங்கை போன்றவள். அவளுக்கு எட்டுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவள் கணவர் அலெக்ஸாண்டர் பாவ்லோவிச் போகார் யெல்ட்ஸெவ் மன்னவை உறுப்பினர். அவர் உமக்குத் தொழிலில்கூட உதவுவார். நான் ஒரு சொல் உரைத்தால் போதும். அவர்கள் வீட்டில் பிள்ளைகளுடன் பிள்ளையாக லிஸாவைச் சேர்த்து வளர்க்க இணங்குவார்கள்” என்றான்.

பாவ்லோவ்ஸ்கியும் இணங்கினான்.

அன்றே கிளாவ்டியா

பெட்ரோவ்னாவிடம் வெல்ச்சானினாவ் பேசினான். அவள் அவனிடம் அளவற்ற பாசம் கொண்டவள். உண்மையில் அவள் அவனைக் காதலித்து மணக்க விரும்பியிருந்த காலம் ஒன்று உண்டு. அவன் குறைகளை அவள் அறிந்ததினால், அங்ஙனம் செய்யாததற்காக இப்போது வருத்தமில்லை. ஆனால் அதே சமயம் பழைய பாசத்துடன் புது மதிப்பும் நட்பும் வைத்திருந்தாள். எனவே அவள் குழந்தையின் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றாள்.