186
66
அப்பாத்துரையம் - 24
எனக்கு ஒரு குழந்தை இருக்கக்கூடும் என்று நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள்- இருக்க முடியாது என்றுதான் எவரும் சொல்வார்கள். ஆனால் கடவுள் அனுப்பினார். கடவுளுக்கு நான் நன்றி செலுத்தவேண்டும். உமக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்”
இறுதி மூன்று வாசகங்களையும் அவன் கூறும்போது அவன் முகம் தழலாகக் கொழுந்துவிட்டெரிந்தது.
“எனக்கு ஏன் நன்றி தெரிவிக்கவேண்டும்?" என்று வெல்ச் சானினாவ் ஒப்புக்குக் கேட்டுவைத்தான்.
“நீங்கள் எங்கள் இருவருக்கும் நண்பர். உங்கள் நட்பின் கனி வினால்தான் எங்கள் வாழ்வில் இந்தப் புத்தொளி ஏற்பட்டிருக்க முடியும்” என்று அவன் மெட்டு விடாமல் பேசினான். அத்துடன் அவன் நிறுத்தவில்லை. “அப்பிள்ளை தான் லிஸா. சில சமயம் நான் நினைப்பேன். அது என் பிள்ளைதானா, மிஹலாவிச்சி..." அவன் பேசுமுன் வெல்ச் சானினாவ் குறுக்கிட்டு “ இது என்ன பேச்சு, பாவ்லோவ்ஸ்கி!" என்றான். அவன் உடனே குழைந்து விட்டான்.
"தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் வெல்ச்சான்! என் நடல்யாவிடம் எனக்கு ஒரே ஒரு கோபம்தான். நான் உங்களிடம் ஈடுபட்டிருந்தேன். உங்களைத் தள்ளிவிட்டு அந்தப் பெரிய மனிதனின் நட்பை நாடினாள்..."
வெல்ச்சானினாவ் பேச்சை வளரவிடவில்லை. பாவ் லோவ்ஸ்கியின் பேச்சு சர்க்கரை பூசிய நஞ்சு... கவர்ச்சிகரமாக ஆடிக்கொத்தவரும் பாம்பு என்று கண்டான். ஆகவே லிஸாவைப்பற்றி- தன் உயிர்ப்புதல்வி லிஸாவின் வளர்ப்புப் பற்றித் தன் பேச்சைத் திருப்பினான்.
அவன் என்ன நினைத்தானோ? குழந்தையை வளர்ப்பது தன்னால் முடியாத பெருஞ்சுமை என்பதை வற்புறுத்தினான். "இதோ பாருங்கள். தாய் இல்லை. வீட்டில் யாரும் துணை யில்லை. நானோ நாடோடி. அவளை யார் கவனிப்பது?” என்றான்.
"ஏதேனும் உறவினராகப் பார்த்து..." வெல்ச்சானினாவ்
சமாதானம் கூறினான்.