(198
நான்
அப்பாத்துரையம் - 24
ஆனால்
பெண்களிடம் பசப்புபவனல்ல;
பண்புடையவன் அவள் கொண்டுவந்த பொருள்களை வாணிக மரபுப்படி நான் ஒரே ஒரு தடவைதான் தட்டிக் கழித்துக் குறை கூறினேன். அப்போது அவள் முகம் பட்ட பாட்டைக் கண்டு நான் துடியாய்த் துடித்தேன் உடனே பேச்சை மாற்றினேன். அடிக்கடி கொண்டு வந்ததை வாங்கி வைத்து விட்டுப் பேசாது பணம் கொடுப்பேன். அவள் பேசாது கொண்டு போவாள்.
அவள் தன் கடைசிக் கந்தையைக் கொண்டுவந்தாள்- அது உண்மையிலேயே ஒரு கந்தை- அதிலுள்ள கம்பளி மயிர்கள் சுக்குச் சுக்காகப் பிய்ந்துபோயிருந்தன. என்னால் அதை அலைக்கழித்துக் கேலி செய்யாமலிருக்க முடியவில்லை.“இதுவும் வந்துவிட்டதா, அடகுப் பொருளாக!" என்றேன். அவள் முகம் கூம்பிவிட்டது. அதை உடனே கையிலெடுத்துக் கொண்டு பேசாது திரும்பிவிட்டாள்.
வயது
அவளை நான் தனிப்பட, உன்னிப்பாகக் கவனித்தது அன்றுதான். அவளுக்கு அப்போது பதினாறு இருக்குமென்று மதிப்பிட்டேன். அதற்கு ஒரு மூன்று மாதம்தான் குறை என்று பின்னால் அவளிடமிருந்து அறிந்தேன். ஆனால் அவள் உள்ளம் இதனினும் இளமையானது என்று எனக்குத் தோன்றிற்று. ஒரு பதினான்கு வயதுச் சிறுமியின் உள்ளம் அது என்று நான் அன்று கருதினேன்.
அவளைத் திருப்பியனுப்பியதற்காக அவள் கொண்ட கோபம் நிலைக்கவில்லை. நிலைக்காது, நிலைக்க முடியாது என்று எனக்குத் தெரியும். வேறு எந்த அடகுக் கடைக்காரனும் என்னளவுகூட அவள் பொருளுக்குச் சலுகை தர முடியாதென்று நான் அறிவேன். அன்றுதான் அவளும் வேறு கடைக்குச் சென்று என் அருமையை அறிந்து கொண்டிருப்பாளென்று என்னால் நினைக்காமலிருக்க முடியவில்லை.
அடுத்த தடவை அவள் கொண்டுவந்த பொருள் முந்தியவற்றைப் பார்க்க அவ்வளவு மோசமாயில்லை. அது ஒரு மெருகு போன பித்தளைப் புகைக் குழாய். கோபத்துக்குப் பின் அவள் வந்த முதல் நாளாததால் சற்றுக் கடுமையாகவேதான் வரவேற்றேன். ஆனால் கொடுத்தது இரண்டு வெள்ளி, அதைப் பெற்றுக்கொண்டு வழக்கம் போலப் போக இருந்தாள். நான்