உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(200

66

அப்பாத்துரையம் - 24

“சரி, அதை அப்படியே என் வழிபாட்டுக்குரிய மற்ற சிலைகளுடன் வைத்துக் கொள்கிறேன்" என்றேன். அதற்குப் பத்து வெள்ளிகள் கொடுக்கப் போனேன். அது பத்து வெள்ளிகள் பெறாதென்பது அவளுக்குத் தெரியும். நான் முன் கூறிய கேலி அவள் நினைவுக்கு வந்தது.

“நீங்கள் என் வறுமையை அவமதிக்க வேண்டாம். எனக்கு வேண்டியது ஐந்து வெள்ளிகள் தான். நான் அதை விரைவில் மீட்டுக் கொள்ளப் போகிறேன்.” என்றாள்.

நான் ஐந்து வெள்ளிகள் கொடுத்தேன். “வறுமையை அறியாதவன் அல்ல; நான் அதை நன்கு அறிந்தவன். அதனால் தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன்."

ஒருவாசகத்தில் நான் அவள் மதிப்பை உயர்த்தினேன்.என் மதிப்பையும் உயர்த்தி விட்டேன் ஆனால் பேச்சு அத்துடன் முடியவில்லை.

66

"உலகு உங்களுக்களித்த வறுமைக்கு நீங்கள் பழி வாங்கும் வழி இது போலும்!” என்றாள்.

அவள் படிப்பை அவள் காட்டினாள், படியாதவருள் என்னைச் சேர்த்து.

நான் உடனே கூறினேன். “அம்மணி, உலகில் தீமையை நாடும் தொகுதியில் நான் ஒரு பகுதியாகத் தான் இருக்கிறேன். ஆனால் அப்பகுதி தீமை நாட்டத்தினிடையே நன்மை செய்யும் பகுதி”

இச்சொற்களின் பகட்டாரவாரமும் சொற்செறிவும் அவளைத் திடுக்கிடவைத்தன. “ஆ! இது ஒரு சீரிய உரை. உரை. எங்கோ கேட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.” என்றாள்.

இதற்குத்தான் நான் காத்திருந்தேன்.

66

ஆம் கவிஞன் கெதேயின் ஃவாஸ்டஸில் வருகிறது; மெஃலிஸ்டா ஃவிலிஸின் கூற்று இது.

அவள் வாழ்வின் குறைபாடுகள், உள்ளத்தின் உயர் நோக்கம், சீரிய நற்பண்புகள் யாவும் நான் அறிந்தேன். முந்திய