உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

201

வகையில் அவள் நிலையை விட என் நிலை மேம்பட்டது என்பதை நான் அறிய நாளாகவில்லை. அவள் சிற்றன்னையார் பிள்ளைகளுக்குப் பாடங் கற்றுக் கொடுத்து வந்தாள். அவர்கள் வீட்டு வேலையையெல்லாம் செய்து, பெருக்கி மெழுகுதல் வரை ஒன்று கூடப் பாக்கி விடாமல் செய்தாள் அவளை இவ்வாறு அவமதித்த சிற்றன்னையார் நான் என் வறுமையில் மேற்கொண்ட அடகுக்கடையைக் கூட உயர்வாக மதிக்கத் தக்கவர்களே. ஆனால் நானோ இதனை பட்டாளத்திலிருந்து விலகி மேற்கொண்டவன்; உயர் அறிவும் அவாவும் உடையவன். இத்தனைக்கும் அவள் ஏற்றவளாகத் தான் தோன்றினாள். ஏனெனில் இவ்வளவு வறுமையிடையேயும் ஊழியங்களிடையிலேயும் அவள் தனிமுறையில் ஒரு தேர்வுக்குப் படித்து எழுதி, அதில் தேறியிருந்தாள். நான் அவளை மணந்துகொள்ளத் திட்டமிட்டேன். இவ்வெண்ணத்தை அவள் மீது புகுத்தியவன் நான் அல்ல; ஒரு பணங் கொழுத்த வணிகன். இரண்டு மளிகைக் கடைகளுக்கு அவன் உரிமையாளன். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். அவனுக்குப் பிள்ளைகள் வேறு இருந்தனர். பிள்ளைகளுக்கு ஒரு ஆயா, ஒரு ஆசிரியை; வீட்டுக்கு ஒரு வேலைக்காரி; தனக்கு ஒரு போக்கிடம்; இத்தனையும் சம்பளம், இதர செலவு இல்லாத முறையில் அவள் மூலம் பெறத் திட்டமிட்டு அவன் அவளை மணங்கோரினான். சிற்றன்னையர் அவன் செல்வத்தை எண்ணியும் அவள் துன்பத்தில் மகிழ்ந்தும் எளிதில் இணங்கினர். பாவம், ஏழைப் பெண் வெளியே சொல்ல வாயின்றி வெம்பி வெதும்பினாள்.

இச் சமயத்தில் நான் அவளிடம் கேட்டேன், “நான் உன்னைக் காதலிக்கிறேன். என்னை நீ மணந்து கொள்வாயா?” என்று.

கரடியாக வந்த அந்த வணிகன் அவளை அச்சுறுத்தியிரா விட்டால், அவள் என்னை நாடியிருப்பாளோ, மாட்டாளோ? எனக்குத் தெரியாது. அந்தச் சைத்தான் ஒரு புறம், வறுமைமற்றொருபுறம் அவளை வழி மறித்து என்னை நோக்கித் துரத்தின என்பதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நான் உள்ளூர என் தகுதியை மதித்தேன். அதைக் காட்டி அவள் முழு உள்ளன்பையும் மதிப்பையும் பெற நான்