உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(222

அப்பாத்துரையம் - 24

அஸோஜிரோ சென்ற சிறிது நேரத்திற்குள், மியூகியின் தந்தையிட மிருந்து அவளுக்கும் ஒரு அவசரச் செய்தி பறந்து வந்தது. அவள் தந்தை அமைச்சராயிருந்த மாகாணத்தின் முதல்வன் பெண்வழிப்பட்டு ஆட்சியைப் புறக்கணித்துவிட்டு, மட்டற்ற இன்ப வாழ்வில் பெரிதும் ஈடுபட்டிருந்தான். நாடு சீரழிவுற்றது. நாட்டு மக்கள் நலிந்தனர். நல்லறிஞர் இதயம் துன்புற்றுத் துடித்தது. இது போதாமல் அவன் காதற் கிழத்தியின் உடன்பிறந்தவனான டென்ஸோ, முதல்வன் பேரால் மக்கள்மீது தாங்கொணாத வரிப்பளுவைச் சுமத்தினான். டென்ஸோவின் அடக்குமுறை தாளாத மக்கள் கிளர்ச்சி செய்தனர். அக்கிளர்ச்சிப் புயலின் பொருமலையும், மக்கள் உள்ளமாகிய எரிமலையின் குமுறலையும் கண்டு, செய்வது இன்னதென்றறியாது முதல்வன் தத்தளித்தான். இந்நிலையில் முன்பு தன் போக்குப் பிடிக்காமல் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெற்று வரும் மியூகியின் தந்தை யூமினோ சுகேயே அவன் மீண்டும் அழைத்தான். யூமினோசுகே மியூகியை விரைவில் அழைத்துக் கொண்டு தன் நகருக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.

கியோட்டோ பாலத்தருகே அஸோஜிரோவை மியூகியுடன் இணைக்க உதவிய உஜி ஆறு, மீண்டும் ஒருமுறை அவர்கள் எதிர்பாராமல் சந்திக்கக் காரணமாயிற்று. விரைவில் தங்கள் தலைநகரம் செல்ல அஸோஜிரோவின் ஆட்கள் விதிர்விதிர்த்தனர். ஆனால் அன்றிரவு காற்று அவர்கள் போக்குக்கு எதிர்முகமாக வீசிக் கொண்டிருந்தது. எனவே மீண்டும் காற்றுத் திரும்பும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆற்றோரமுள்ள ஒரு துறையில் மற்ற படகுகளுடன் படகாக அஸோஜிரோவின் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படகுகளிடையே மியூகியும் அவள் தந்தையும் தம் மாகாணம் நோக்கிச் செல்லும் படகும் தங்கியிருந்தது. இது அவர்களுக்குத் தெரியாது. ஒருவரை ஒருவர் அறியாமல் மியூகியும் அஸோஜிரோவும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையிலே, அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளிலேயே இருந்தனர்.

அன்று இரவு விண்ணில் முழு நிலா எரித்துக் கொண்டிருந்தது. உஜி ஆற்றின் சிற்றலைகளெல்லாம் வெற்றித்