உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

223

மின்னின. ஆற்றின்

தகடுகள் போலத் தகதகவென்று வெதுவெதுப்பான நீர்த்திவலைகளைச் சுமந்து கொண்டு இராக்காற்று படகின் தளத்தில் வீசியது. அஸோஜிரோ தன் உள்ளத்தில் குமுறிய புதுக் காதலுணர்ச்சியையும், பிரிவுத் துயரின் வெம்மையையும் தாளமாட்டாமல் தளத்தின்மீது இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தான். அவன் உள்ளம் உஜி ஆற்றின் வழியே சென்று கியோட்டோப் பால முகப்பின் மின்மினிக் காட்சிகளிடையே ஊடாடிக் கொண்டிருந்தது. அச்சமயம் ஒரு இனிய இசை எழுந்து வந்து அவனைத் தட்டி எழுப்பியது. அவன் வரைந்த காலையழகுப் பாட்டு அவன் காதுகளில் எதிரொலித்தது. திடுக்கிட்டுப் பின்புறமாகத் திரும்பினான்.என்ன வியப்பு! என்ன இன்பம்! அவன் கண்ட காட்சியை அவன் கண்கள் நம்ப மறுத்தன. அடுத்த படகின் தளம்- அங்கே மற்றொருபுறம் பார்த்த வண்ணம் மியூகி- அவள் உள்ளமுருகிப் பாடிக் கொண்டிருந்தாள். காதும் கண்ணும் ஏதோ கூட்டி ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி மியூகியின் உருவெளித் தோற்றத்தைத் தன்முன் கொண்டு வந்து காட்டுகின்றனவோ என்று அவன் நினைத்தான். ஆயினும் அவனையறியாமல் அவன் நா 'மியூகி' என்று உரத்துக் கூவிற்று.

மியூகி கண்துயில் கொள்ள முடியாமல் கழிந்துபோன காதல் நினைவுகளில் மனம் ஆழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள். அந்நேரம் அவளுக்குப் பழகிய குரல், உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒலி அவள் பெயர்கூறி அழைப்பது கேட்டுத் திரும்பினாள். எதிரில் காதலனைக் கண்டதும் அவள் உடலைவிட்டு அவளது உயிர் அவனிடம் தாவிச் செல்வது போலிருந்தது. தன் படகிலிருந்து அஸோஜிரோவின் படகிற்கு அவள் ஒரே தாவாக தாவிக் குதித்து வந்து அவன் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள். கண்ணின் இடைக் கடையோரத்தில் சிறு நீர்த்துளிகள் துளிர்த்தன, இருவருக்கும், இருவர் உதடுகளும் ஒத்த அசைவோடு “ஆ, என்ன எதிர்பாராத சந்திப்பு” என்று துடித்தன. பிறகு சொற்கள் வெளிவரவில்லை. நெடுநேரம் ஒருவரை யொருவர் இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்றனர்.

66

ஆ, என் மியூகிதானா?" என்று அவன் அவளை வாரி அணைத்துக் கொண்டான். அவன் பேசி வாய் மூடுமுன் அவள்