உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(224) ||

அப்பாத்துரையம் - 24

இதழ்கள் அவன் இதழ்களோடு சென்று பொருந்தின. “என் பெயர் உங்கள் இதழ்களில் இப்படியே எப்போதும் இருக்கட்டும்” என்று கூறி மியூகி நகைத்தாள்.

காதலரிருவரும் சிறிது நேரம் மனங்கலந்து பேசினர்.ஆனால் மியூகி இத்தடவை மீண்டும் அவனிடமிருந்து பிரிந்து, காதலனைக் காணாத வாழ்க்கை யெனும் வறண்ட பாலைநிலத்திலே வதிந்து வதைபட மனம் ஒப்பவில்லை. "அன்பரே, நீங்கள் என்ன சொன்னாலும் என் செவிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளாது.என் மனமும் ஒரு நிலையில் நில்லாது. நான் இனி உங்களை விட்டு ஒரு கண்ணிமைப் போதும் பிரிந்திருக்க முடியாது. பிரிவதானால், இதோ இந்த உஜி ஆற்றுக்கே என் உயிரை ஒப்படைத்து விடுகிறேன்” என்று கூறி ஆற்றில் குதிக்கத் துணிந்தாள். அஸோஜிரோ அவளைச் சிறுபிள்ளை போலத் தடுத்து எடுத்துத் தன் மார்புறத் தழுவிக் கொண்டு "என் உள்ளமே! உன்னை நான் தூக்கிக் கொண்டு நெருப்பாற்றின் மீது ஓடக்கூடத் தயங்க மாட்டேன். உனக்காகப் பட்டம், பதவி, நாடு, நகரம் யாவும் துறக்கவும் நான் அஞ்சவில்லை. ஆனால் உன்னைக் காணாமல் உன் பெற்றோர் தீயிற் புழுப்போலத் துடிப்பரே! அவர்களுக்கு ஆறுதலாக ஏதாவது எழுதி வைத்துவிட்டாவது செல்லவேண்டாமா?" என்று கேட்டான்.

பெற்றோர் கடமையைக் கூட மறக்கும்படி செய்துவிட்ட தன் காதல் ஆர்வத்தை எண்ணி அவள் நாணமடைந்தாள்.பிறகு "இதோ என் தந்தைக்குச் சிறு குறிப்பொன்று எழுதி வைத்துவிட்டு விரைவில் வருகிறேன்” என்று கூறிவிட்டு அவள் தன் படகுக்கு ஓடினாள். மியூகி படகுக்குள் நுழைந்தது தான் தாமதம். மிக விரைவில் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் திரும்பவும் ஆவலோடு ஓடிவந்தாள். ஆனால் அவள் திரும்பிவந்து சேர முடியவில்லை. அவள் படகினின்றும் அஸோஜிரோவின் படகு விரைந்து அகன்று கொண்டிருந்தது. அங்கே அஸோஜிரோ மியூகிக்காக ஆவலோடு காத்துக் கிடந்தான். இங்கே மியூகி அசைவற்றுச் சிலைபோல நின்றிருந்தாள், செய்வதின்னதென்று அறியாமல்!

உண்மை, யாதெனில், காதலர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காற்று திரும்பியடிக்கத் தொடங்கியிருந்தது. அதை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. ஆனால் அதற்காகவே