உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

[225

அதிக விழிப்புடன் காத்துக் கிடந்த அஸோஜிரோவின் படகோட்டிகள் படகின் தளைகளை அறுத்து விட்டிருந்தனர். மியூகி தன் படகு சென்று திரும்பிவரும் சமயம் காற்று சற்றுப் பலமாக வீசியதால், யாரையும் எதிர்பாராமல் அஸோஜிரோவின் படகு பாய் விரித்துப் பறந்தது.

இருஉள்ளங்கள் அப்போது பட்ட பாட்டை இறகு எழுத மறுக்கும்; ஏடு கூட ஏற்க மறுத்துவிடும். பழம் நழுவிப் பாலில் விழுந்து, பிறகு மீண்டும் நழுவி நஞ்சில் விழுந்த கதையாகி விட்டது. இதுமட்டுமா? ஒருவர் படும் வேதனையை மற்றொருவர் உணர முடியாமலும் போய்விட்டது. இதுதான் பொறுக்க முடியாத துன்பம். என் செய்வர் காதலர்? படகுகளினிடையே உள்ள தொலைவு விரைந்து நீண்டுகொண்டே போயிற்று.

நடந்தது இன்னதென அஸோஜிரோதான் முதன் முதலில் ஊகித் துரை முடிந்தது. அவன் தன்னைத்தானே ஒருவாறு தேற்றிக் கொண்டான். விலக்க முடியாத இக்கொடூரப் பிரிவை வீரத்துடன்ஏற்றுப் பொறுமை யுடனிருக்கும்படி அவன் சைகை காட்டினான். மியூகி இதனை உணர முடியவில்லை. அவளுக்கு வந்த மனக்கசப்பில் அவள் அதில் கருத்தைச் செலுத்தவும் முடியவில்லை. அவள் தன் துயர்வெறியினால் தன் கையிலிருந்த விசிறியை- அஸோஜிரோவின் காதல் நினைவுச் சின்னத்தை மிகுந்த வலிவோடு வீசியெறிந்தாள். அஸோஜிரோ அதை எடுத்துக் கொண்டான். தன் காதலி அனுப்பும் அவசர விடையென்றே அவன் அதனைக் கருதினான். அவளும் அதுபற்றி அப்புறம் ஒன்றும் சிந்திக்கவில்லை.

ளங்காற்று உ ஜி ஆற்றில் அன்று அவர்களை இணைத்தது; அதே உஜி ஆற்றில் இராக் காற்று அவர்களைப் பிரித்துவிட்டது!