உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. துன்பம் தொடர்ந்தது

மியூகியின் வாழ்க்கையில் காலம் தன் திருவிளை யாடல்களை நடத்தத் தொடங்கிற்று. அவள் தந்தை யூமினோசுகே நடத்தத் தொடங்கிற்று. அவள் தந்தை யூமினோசுகே மீண்டும் அமைச்சர் பதவியேற்று, நாட்டில் உலவிய குழப்பத்தை அடக்கினார். அவர் புகழும் செல்வமும் முன்னிலும் பன்மடங்கு வளர்ந்தன. ஆட்சியின் தலைவன் தன் போக்கை முற்றிலும் ாற்றிக்கொள்ளா விட்டாலும் யூமினோசுகேயின் ஆற்றல் காரணமாக அவருக்கு எப்போதும் தனிப்பட்ட மதிப்பு அளித்து வந்தான். அவர்கள் நட்பும் வளர்ந்து வந்தது.

தந்தையின் வாழ்வு வளம் பெற்றது; ஆனால் மகள் உள்ளம் நலிந்தது. அழுது அழுது அவள் கண்களும் கன்னங்களும் கண்ணீரால் நனைந்து போயிருந்தன. ஆனை நோயுண்ட விளங்கனி போல அவள் உள்ளமழிந்து பொலிவிழந்து கிடந்தாள். கோள்மறைப்புக்கு ஆளான திங்களஞ் செல்வன் போல அவள் முகம் வாடி வெதும்பிற்று. மியூகியின் துயரறிந்த அஸாகே, அவள் படும் அல்லல் பொறுக்காமல் அவள் தாய் மிசாவாவிடம் மெல்லத் தோழியின் மனநிலையை எடுத்துரைத்தாள்.

மிசாவா பெருந்தன்மையுள்ளம் படைத்தவள். மகளிடத்தில் மாறாத அன்புடையவள். ஆகவே அவள் மியூகியின் தந்தை வந்தவுடன் இதற்காவன செய்வதாகக் கூறி அவர் வரவுக்காகக் காத்திருந்தாள். அதற்குள் தாயின் பாசத்துக்கும் புதல்வியின் நேசத்துக்கும் புதுப்புதுச் சோதனைகள் கிளம்பின.

அம்மாகாணத் தலைவன் தீயொழுக்கத்திற்குக் காரணமான அவன் காதற்கிழத்தியின் அண்ணனான டென்ஸோவைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறோம். அவன் தீமைகள் பல. பிறருக்கு

ன்னல் விளைவித்து அது கண்டு மகிழ்வதே அவன் இதயத்திற்கு