உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

227

இதமான இன்ப விளையாட்டு. அழகிய பெண்களைக் கண்டால் அவர்களை அடையும் வரை அவன் தன் திறந்த கண்களை மூடுவதே இல்லை. அந்தப் புல்லனின் தீய பார்வையில் மியூகியின் அழகு பட்டுவிட்டது. அவள் பருவ எழில் அவன் கண்களை உறுத்திற்று. எப்படியும் மியூகியை அடைந்தே தீருவது என்று அவன் கச்சைகட்டிக் கொண்டான். அவளைத் தனக்கு உரிமையாக்கும்படி அவன் மிசாவாவைப் பன்முறை வற்புறுத்தி நெருக்கினான்.பாவம்! மிசாவா மகளின் உள்ளக் காதலை அவள் தந்தையிடம் கூறுமுன், டென்ஸோவிடம் அதை வெளியிட்டுக் கூற முடியாமலும் அவனை மறுக்க வேறு காரணம் காட்ட முடியாமலும் தத்தளித்தாள்.

ஒரு பக்கம் கண்ணீர்க் கடலில் மிதந்து நிற்கும் மியூகி! மறுபுறம் புயல் போல இரைந்து வந்து தொல்லைப்படுத்தும் டென்ஸோ! இவை இரண்டுக்குமிடையே மிசாவா ஊசலாடினாள்.இந்நிலையில் தன் கணவன் யூமினோசுகே திரும்பி வரும் வரை எப்படியும் பொறுத்திருக்கும்படி அவள் அவனை வேண்டினாள். காமுகர்களிலும் கடைகெட்டவனாகிய

அக்கொடியோன் மிசாவாவின் சொல்லை எள்ளளவும் மதியாமல், அவள் முன்னிலையிலேயே மியூகியை வலிந்து பிடித்து இழுக்கத் தொடங்கினான். தாய்க் கோழியின் முன் குஞ்சை எவரேனும் தாக்க வந்தால், தாய்க்கோழி சும்மா இருக்க முடியுமா? உயர்குடி நங்கையரின் வழக்கப்படிப் படைக்கலப் பயிற்சி உடைய மிசாவா வாளெடுத்து டென்ஸோவைத் தாக்க முனைந்தாள். டென்ஸோ காமுகன் மட்டுமல்ல, கொடுவாள் என்றால் குலைநடுங்கி விழிபிதுங்கும் கோழை. ஆகவே மிசாவா வாளை ஓங்குமுன் அவன் அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, உயிர் பிழைக்க ஓடினான்.

கழுகினிடமிருந்து அவள் தன் குஞ்சைக் காத்தாள். ஆனால் மற்றொருபுறமிருந்து காலவேடன் குஞ்சின் வாழ்வில் தன் மாயவலையை விரித்தான்.

ஆட்சித் தலைவனிடம் ஒரு நாள் அடுத்த மாகாணத் தலை வனிடமிருந்து தூதுவன் ஒருவன் வந்திருந்தான். கோமஸாவா ஜிராஸா யெமோன் என்பது அவன் பெயர். அவன் தோற்றமும் நாகரிகமும் தலைவனின் மனத்தைக் கவர்ந்தன. அவனுடன் தன்