பிறமொழி இலக்கிய விருந்து -2
263
மனிதன் பண்பு திடுமெனப் படைக்கப்பட்ட ஒரு குருட்டுப் படைப்பன்று.அது ஒழுங்கமைதியுடைய, ஒரு வளர்ச்சிப் பண்பு. காட்சிக்குரிய புறப் பொருளுலகில் நாம் காணும் காரணகாரியத் தொடர்பு எவ்வளவு வழுவாக் கட்டாய நிகழ்ச்சியாய் இயங்குகிறதோ, அதுபோலவே கண்காணாத நினைவுலகி லுள்ள இப்பண்பும் விலக்கமுடியாத தனியாற்றல் வாய்ந்தது; காரண காரியத் தொடர்புக்கு உட்பட்டது. மேம்பட்ட அதாவது தெய்வத்தன்மையுடைய மனிதப்பண்பு எவர் தயவு நாடியோ அல்லது தற்செயலாகவோ வந்து கிட்டுவதன்று. நல்லெண்ணங் களின் பயனாகவும் தெய்வீகக் கருத்துக்களுடன் விடாது பழகிய நீண்ட பயிற்சியின் பயனாகவும், நீடித்த கடுமுயற்சியின் பயனாகவுமே அது தோன்றுகின்றது. இதற்கு மாறாக, குள்ளநரித் தன்மை வாய்ந்த இழிதன்மையுடைய எண்ணங்களுக்கு உள்ளத்தில் நீடித்த இடம் தருவதனால் ஏற்படும் பயனே கீழ்த் தரமான, விலங்குத்தன்மை வாய்ந்த பண்பு ஆகும்.
மனிதன் ஆவதும் தன்னாலே; அழிவதும் தன்னாலே. அவனைக் கொல்லும் கருவிகளை அவனைத் தவிர வேறு யாரும் செய்வதில்லை; அவனே செய்கிறான். தன் இன்பத்துக்கும் உறுதிக்கும் அமைதிக்குமாக வானளாவும் நன்மாளிகை கட்டும் அதே கைகளாலேயே, அவன் இவ்வழிவுக் கருவிகளையும் இயற்றுகின்றான். நினைவாற்றல்களைச் சரியாகத் தேர்ந்து எடுத்து அவற்றை வாய்மையுடன் செயல்முறைப்படுத்துவதனால், மனிதன் தெய்வப் பண்பு அதாவது முழு நிறைநலம் அடை கின்றான். அவற்றைத் தவறாகத் தேர்ந்தெடுத்துத் தீய முறையில் பயன்படுத்துவதனால் அவன் விலங்குநிலைக்கும் கீழாக இறங்க நேர்கிறது. இந்த இரண்டு கோடிகளுக்கும் இடையே பண்பின் பலதரப்பட்ட படிநிலைகள் இருக்கின்றன. ஒரு கோடியை அணுகுந்தோறும் மனிதன் பண்புகளை ஆட்கொள்ளும் பண்பாளனாகிறான். மறுகோடியை அணுகுந்தோறும் அவன் பண்புகளுக்கு அடிமையாகி, அவற்றால் ஆளப்படும் பண்புகேடன் ஆகிறான்.
மனிதன் எண்ணங்களின் ஆட்சித்தலைவன்; மனிதனே. பண்புகளை உருவாக்குபவனும், சூழ்நிலைகளையும் நிகழ்ச்சி களையும் ஆக்குபவனும் அவனே. தவிர, அவன் தன் ஊழுக்குத்