உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(264

அப்பாத்துரையம் - 24

தானே முதல்வனாகவும் அமைகிறான். இவ்வுண்மைகளைத் தற்கால மனித நாகரிகம் அணிமையில் நன்கு காட்டியுள்ளது. இவ்வகையில் இக்காலத்தில் கண்டுணரப்பட்ட உண்மைகளை விட ஆன்மிகத்துறையின் மெய்ம்மைகளுக்குள்ளே அழகுப் பண்பும் திறமும் அமைந்த உண்மைகள் வேறு எவையும் கிடையா. இவற்றைவிட மனித வாழ்வை வருங்காலத்தில் தெய்வீக வாழ்வாக்கும் பண்புகளும் மனிதனுக்குத் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஊட்டும் பண்புகளும் வேறு எவையும் இல்லை.

வல்லமை, அறிவொளி, அன்பு ஆகியவை மனிதன் உயிர்நிலைத் தெய்வீகப் பண்புகள். இவற்றின் மூலமே அவன் எண்ணங்களின் இறைவன் ஆகிறான். இவற்றின் மூலமே அவன் வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியிலும் நெருக்கடியின் பூட்டவிழ்க்கவல்ல ஒவ்வொரு திறவுகோலை உடையவனாகிறான். விரும்பிய விரும்பிய வகையிலெல்லாம் தன்னை மாற்றி யமைக்கவும். தளராது எப்போதும் தனக்குப் புத்துயிர் ஊட்டிக்கொள்ளவும் இவையே அவனுக்கு வல்லமை தருகின்றன.

எப்போதும் எந்த நிலையிலும், மிகத் தாழ்வான

அடிமைப்பட்ட நிலையிலும்கூட, மனிதன் தனக்குத் தானே முதல்வனாகத்தான் இருக்கிறான். ஆனால் அடிமைப்பட்ட நிலையில் அவன் ஒரு குடும்பத்தைத் தவறான முறையில் ஆட்சி செய்யும் அறிவற்ற மூடமுதல்வனை ஒத்தவன். தன்னிலையைப் பற்றி அவன் எப்போது சிந்திக்கத் தொடங்குகிறானோ. தன் ஆன்மிக வாழ்வினை இயக்கும் மூல ஆற்றல் எது என்பது பற்றி அவன் எப்போது ஆராயமுற்படுகிறானோ, அப்போதிருந்து அவன் அறிவுள்ள ஆட்சித்தலைவன் ஆகிறான். அது முதல் அவன் தன் ஆற்றலை அறிவின் உதவிகொண்டு செயலாற்று விக்கிறான்; தன் கருத்துக்களை நற்பயன் அளிக்கும் முறையில் இயக்க முனைகிறான். இத்தகைய மனிதனையே நாம் தன்னுணர்வு பெற்ற மனிதன், தனக்குள்ளே தன் கருத்தின் மூலமுதலைக் கண்டுணர்ந்த மனிதன் என்கிறோம். இக்காட்சியுணர்வு முற்றிலும் தன்முயற்சி, தன்னாராய்ச்சி, தன்செயலறிவு ஆகியவற்றின் முதிர்பயன் ஆகும்.

முயற்சியில்லாமல் எந்த நற்பொருளும் கிட்டுவதில்லை. பொன்னும் வைரமும் கடுமுயற்சியினாலேயே கல்லி