உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(284) ||

அப்பாத்துரையம் - 24

ஒவ்வோர் அசைவும் அவன் கையை இயக்கிக் களிமண்ணில் படிவதுபோல, உள்ளத்தின் ஒவ்வொரு கருத்தசைவும் நரம்பு களின் மூலமாக இயங்கி உடலை உருவாக்கி, உடற்பண்பு களை வளர்க்கின்றன. எனவேதான் நற்கருத்துக்கள், நல்லுணர்ச்சிகள் உடல் நலத்தையும், அல்கருத்துக்கள், அல்லுணர்ச்சிகள் உடல் நலிவையும் நோயையும் உடற்கோளாறுகளையும் உண்டுபண்ணு கின்றன.

துப்புரவற்ற கருத்துக்கள் நெஞ்சத்திலிருந்து துப்புரவற்ற நீலநிறமான நச்சுக்குருதியை நரம்பு நாடிகளில் ஓட வைக்கிறது. தூய எண்ணங்கள் உடலில் துப்புரவான குருதியை ஓடவைத்து, உள்ளத்தையும் வாழ்வையும் ஒருங்கே வளர்க்கின்றன. வாழ்வின் ஊற்றாகிய எண்ணங்கள் தூயவையானால், வாழ்வு முழுவதுமே இங்ஙனம் தூய்மை அடைகின்றது.

உள்ளக்கருத்தை மாற்றாத நோயாளி உணவு முறையை மாற்றியும் பயனில்லை. மருந்து உட்கொண்டும் பயனில்லை. அவை செயலாற்றமாட்டா. ஆனால் கருத்துக்கள் தூயன ஆக்கப்பட்டால், மருந்த தேவைப்படாது. உணவே மருந்தா யமையும். ஏனெனில் தூய கருத்துடையவன் துப்புரவற்ற உணவில் நாட்டமே செலுத்தமாட்டான். நல்லுணவு கொள்பவனுக்கு அதனின் வேறாக நன்மருந்து பிறிது எதுவும் வேண்டாம்.

நோயகற்றும் மருந்தும் உண்டு. நோய்வராமல் தடுக்கும் நன்மருந்தும், உடல்நலம் வளர்க்கும் மருந்தமுதும் உண்டு. நற்கருத்துக்கள் இத்தகைய நன்மருந்தாகவும், இயங்குகின்றன. ஏனெனில் அவற்றின் துப்புரவு துப்புரவான பழக்க வழக்கங்களை உண்டுபண்ணுகிறது. ஞானியருள் குளிப்பும் முழுக்கும் துறந்த ஞானியர் உண்டென்று கேள்விப்படுகிறோம். உண்மையில் இது ஞானியர் இலக்கணமேயல்ல. உள்ளந் தூய்மையாயிருப்பவன் புறத்தூய்மையை வெறுப்பவனாயிருக்கமாட்டான். அதேசமயம் அவன் புறஅழுக்கைக் கழுவுவதுடன் நில்லாமல், அக அழுக்கையும் தூய எண்ணங்களால் கழுவி, அகமும் புறமும் துப்புரவுடையவன் ஆகிறான். நோயணுக்கள் மட்டுமின்றி நோவணுக்களும் அவனை அணுகமாட்டா.

நீ உன் உடலைப் பாதுகாக்க விரும்பினால், உன் உள்ளத்தைக் காத்துப்பேணு. உன் உடலைச் செம்மையுறச் செய்ய