பிறமொழி இலக்கிய விருந்து -2
291
த்தத்துவத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு முயற்சிமீது முயற்சி, பொறுமையுடன் பொறுமை, வலிமைமீது வலிமை என அடுக்கிச் சென்றால், உடலும் உள்ளமும் உரம்பெறுவது உறுதி. அவ்வுரமே தெய்வப்பண்பின் அதாவது நிறை மனிதப் பண்பின் முதற்கூறு.
நோக்கமின்மையையும் நலிவையும் புறங்கண்டு முன்னேறிச்
செல்பவன் நோக்கமாகிய வானமுகட்டையும் வானவெளியையும் மறைத்துக்கொண்டிருக்கும் இருஞ் சிறைக்கூடங் கடந்து அகல்வெளியிலுலவும் உரம்பெற்றவர்களின் தோழமையில் வாழ்வுதொடங்குகிறான். சிறைக்கூடத்துக்கும் உள்ள உரமுடையவர் வாழும் இவ்வானுலகுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். சிறைக்கூடத்தில் தோல்விகள் தோல்விக்குத் தான் வழிகாட்டும். அகலுலகில் தோல்விகள் வெற்றிக்குரிய படிகள் ஆய்விடும். அதுமட்டுமன்று.சிறைக்கூடத்தின் வெற்றிகள் தற்காலிக மின்னல் வெற்றிகள், அவை வெற்றிப் பயிரின் விதைகளாகமாட்டா. ஆனால், உரவோர் உலவும் அகலுலகின் வெற்றிகள் தம்மினும் மாபெரு வெற்றிகளுக்கான நூற்றுப் பண்ணைகள் ஆகின்றன. அவை தோல்விகளுடன் சேர்ந்து வெற்றிப்பயிர் வளர்க்கும். வெற்றி தோல்விகள் இரண்டுமே இங்ஙனம் உள்ளார்ந்த நலம் பயக்கின்றன. அத்துடன் உரமிக்க நல்லோர் வெற்றியையும் தோல்வியையும் பற்றிக் கவலைப் படாமல், ஆற்றலுடன் கருத்தாண்டு, அச்சமின்றிச் செயலாற்றி, தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் தம் நோக்கம் முற்று விக்கின்றனர்.
நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொள்பவன் அதனை நோக்கிச் செல்லும் பாதைகளில் நேர்பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு கிளைப்பாதைகளில் பிறழ்ந்து செல்லாமல், அதன் வழியாக நெடுக நேரே செல்ல வேண்டும். ஐயங்கள் அச்சங்கள் அவனிடம் தயக்கத்தை உண்டுபண்ணக் கூடாது. அவன் மனஉறுதியை அவை முறித்து நொறுக்கவோ, வளைத்து நெளிக்கவோ, முனைமுறித்து மழுக்கவோ இடந்தரக்கூடாது. ஏனெனில் நன்முயற்சியின் தோல்விகளைப் போல இத்தகு தோல்விகள் வெற்றிக்குப் படிகள் ஆகமாட்டா. அவை முயற்சியின் கால்கைகளையே முறித்து உயிரின் முன்னேற்றத்தை