உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




292

அப்பாத்துரையம் - 24

நிலையாகத் தடுக்க முனைபவை. உள்நின்ற உள்ளத்தின் வலிமையை இவை அரிப்பதனால், புதிதாக வலிமை வாய்ந்த கருத்துக்கள் எழுவதைக்கூட இவை தடைசெய்து விடுகின்றன.

செயல்முனைப்பு செயல்நம்பிக்கையைப் பொறுத்தது. தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை முடியாதவற்றையும் முடியவைப்பவை ஆகும். ஐயமும் அச்சமும் தொடக்கத்திலேயே ஒருவன் முயற்சியைச் சூழ்ந்தால், அது பிறப்பிலேயே கொல்லப்பட்ட குழந்தை போன்ற தாய்விடும். கருவில் மாளும் குழவி தாயின் உடல் நலத்தையும் பெரிதும் கெடுப்பதுபோல, பிறப்பில் மாள்வுற்ற இக்கருத்துக்கள் கருத்துக்குரியவன் வாழ்விலும் சீரழிவு உண்டுபண்ணும். அவன் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் இதே போன்ற கருச்சிதைவுப் போக்கு வலுப்படும். தொடக்கத்திலேயே ஐயத்துக்கும் அச்சத்துக்கும் இடந்தராதவன் முயற்சியில் இடையே அவை புகுந்தாலும், அவை இவ்வளவு சீரழிவை உண்டுபண்ண மாட்டா. முதல் நம்பிக்கையார்வம் ஓரளவு இடையிடைப்பட்ட அவநம்பிக்கை, அச்சம் ஆகியவற்றை எதிர்த்து ஒழிக்கும் ஆற்றலுடையது.

தொடக்கத்திலிருந்து ஐயமாகிய சுழல்காற்றும், அச்ச மாகிய வறட்சியும் தாக்காத வாழ்வுமரம் காலமறிந்து விதைத்த விதைபோலத் தழைத்து வளர்ச்சியுற்று இனிய விளைவுளம் நல்கும். ஐயமோ அச்சமோ தலையிட்ட வாழ்வுமரம் பயன்தர நேர்ந்தாலும் அது பிஞ்சில் பழுத்த கனியாகவோ, கனியாது உதிரும் வெம்பிய காயாகவோதான் இருக்கும்.

நினைவாற்றலும் நோக்க ஆற்றலும் சேர்ந்தே படைப் பாற்றல் ஆகிறது. து உயிர்ப்பண்புடைய ஆற்றலாத லால், தாமே இயங்காத, ஒழுங்கு முறையற்ற, ஒன்றுடன் ஒன்று ணைந்து செயலாற்றாத எண்ணக் குவியல்களையும் எண்ண அலைப்படலங்களையும் அது இணைத்து ஒழுங்குபடுத்தும். அவற்றை இயங்க வைத்து, அது உயிர்த்துடிப்பும் ஒன்றுபட்ட செயலார்வமும் வளர்ச்சிப்பண்பும் உடைய உயிர்க்கோப்பு ஆக்கும். இப்படைப்பாற்றலை உடையவன் நிறை உலகைப் படைத்தளிக்கும் இறைவனின் பேரொளிப் பிழம்பின் ஒரு சிறு நுண் அணுக்கதிராய், தன்னைச் சுற்றியுள்ள சிற்றலுலகுக்கு ஓர் உள்ளுயிராய் நின்று அதனைப் படைத்தளித்து இயக்குகின்றான்.