உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

295

அவன் செய்யும் வரை அவன் இயற்கையின் பேரண்டத்தில் ஒரு சிற்றண்டமாய், இயற்கை நின்றியங்கும் பேரம்பலத்தில் ஒரு சிற்றம்பலமாய் * இயங்க முடியும். பேரம்பலத்தில் என்றும் நின்றியங்கும் பேருயிர் போலச் சிற்றம்பலத்தில் சிற்றுயிர் தற்காலிகமாக இயங்க வேண்டும். அத்துடன் சிற்றுயிர் அப்பேருயிரின் ஆற்றலின் கூறாதலால், தானும் தொடர்ந்தியங்க முயன்று, தன் தோல்விகளினின்று வெற்றியடையவும், தன் மாள்வினினின்று அல்லது முதிர்வாழ்வினின்று மற்றும் புதிய

உயிர்களைத் தோற்றுவிக்கவும் ஆற்றல் பெற்றுப் படைப்பாற்றலிலும் காக்கும் ஆற்றலிலும் பங்கு கொள்கிறான்.

ஒரு மனிதன் வலிவும் நலிவும், தூய்மையும் நோய்மையும், பெருமையும் சிறுமையும் அவனையே பொறுத்தவை; வேறு எவரையும், பொறுத்தவையல்ல. அவனாலேயே ஆக்கப் பெறுபவை; வேறு எவராலும் ஆக்கப் பெறுபவை அல்ல. அவன் ஒருவனால் மட்டுமே அவை மாற்றியமைக்கத் தக்கவை; வேறு எவராலும் மாற்றியமைக்கத்தக்கவை அல்ல. ஆகவே, ஒவ்வொரு மனிதன் சூழலுலகும் அவனவன் தனி உலகே. செடியினத்தின் வளர்ச்சி தளர்ச்சி புறவளர்ச்சி தளர்ச்சியிராமல், உள்வளர்ச்சி தளர்ச்சியாயிருப்பதுபோல. அவன் வளர்ச்சி தளர்ச்சிகள், வாழ்வு தாழ்வுகள் யாவும் அவனுள்ளிருந்து வெளிப்படும் அகப்பண்பு களேயன்றி, புறத்தேயிருந்து வளரும் புறப்பண்புகளல்ல. இந்நிலையில் புறச்சூழல்களைப் பற்றியவரை மனிதருள் எவரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்பது முடியாதகாரியம். 'தன் கையே தனக்கு உதவி' என்கிற பழமொழி இவ்வகையில் புதுப்பொருளுடையது. ஒருவர் மற்றொருவர்க்குச் செய்யத்தகும் உதவியாவதெல்லாம், அகப்பண்பு உதவி மட்டுமே என்பது தெளிவாகும். ஒருவருக்கு ஒருவர் பொருள் தந்துதவுவது, இடர்காப்பது, மகிழ்வூட்டுவது என்பதெல்லாம் மேலீடாகப் பார்ப்பவருக்குப் புற உதவி அல்லது புறச்சூழலை மாற்றி யமைப்பது என்று தோற்றக் கூடும். ஆனால், உண்மையில் இது புறச்சூழலை மாற்றுவதன் மூலம் அகப்பண்பை மாற்றுவதாகவே முடியும். பெரும்பாலும் புறத்தே நின்று செய்யப்படும் இவ்வுதவி அகப்பண்பறிவுடன் அதாவது மெய்யறிவுடன் செய்யப்படாத விடத்தில், நற்பயன் தரும் உதவியாயிருக்கமாட்டாது. பயன் கேடுடையதாகவே இருக்கும். இது எவ்வாறெனில், ஒருவனுக்குப்

து