பிறமொழி இலக்கிய விருந்து -2
299
இன்பங்களுக்கு அடிமையானவன் தெளிவான சிந்தனை யுடையவனாயிருக்க முடியாது. அவன் எதிலும் திட்டமமைத்து முன்னேற முடியாது. அவன் இன்பங்களை ஆய்ந்தறியாதது போலவே, துன்பங்கள், தோல்விகள் ஆகியவற்றின் படிப்பினைகளையும் பயன்படுத்த மாட்டான். தன்னடக்கத்தால் தன்னை இயக்கப்பழகாததால் அவன் துன்பங்களில் மிதந்து பெருந்துன்பங்களில் சென்று விழுவான். இன்பங்களில் மிதந்து, இன்ப துன்ப வேறுபாடறியாமல் துன்பங்களை அணைப்பான். ஓரளவு தன் இன்ப மறுப்பு இருந்தாலல்லாமல், மனிதன் இ துன்ப வேறுபாடுகளையோ, அவற்றின் காரண காரியத் தொடர்புகளையோ உணர்ந்து செயல்வெற்றி அடைய முடியாது. செயல் வெற்றியைவிட முக்கியமான பண்பு வெற்றியை அவன் கனவு காணவும் முடியாது. பொறுப்புடைய வாழ்வு என்ற கப்பல் அறிவுப் பண்பாகிய சுக்கானில்லாமல், பொறுப்பற்ற வாழ்வாகிய சூறாவளியால் தாக்கப்பட்டு ஓயாது உழலும்.
ன்ப
தன்மறுப்பின் அளவே ஒருவன் வெற்றியின் அளவு, அவன் தகுதியின் அளவு. அறிவு நிறைவுடைய தன் மறுப்பையே நாம் பண்பு என்கிறோம். அது அவனை வளர்ப்பதுடன் சமூகத்தையும் வளர்த்து, இரண்டின் வளத்தையும் நலத்தையும் ஒருங்கிணைக்கும் கூறாக இயல்கின்றது. ஆகவே தன்மறுப்பு என்பது தன்னை அழிக்கும் அழிவுக்கூறு அன்று; அது தன்னைச் சமூக வாழ்வுடன் இணைத்து இரண்டையும் ஒன்றுபட வளர்க்கும் ஆக்கக் கூறு. தன்மறுப்புப் பண்பு பெருகுந்தோறும் தன்னம்பிக்கை பெருகுகிறது; உள்ளம் உரமடைகிறது; கருத்து உயர்வு பெறுகிறது.
பேரவா, வஞ்சகம், குறும்பு ஆகியவற்றுக்கு இயற்கை இடந்தருவதாகவே மேலீடாகப் பார்ப்பவருக்குத் தோற்றக்கூடும். உண்மையில் இயற்கையின் அமைதியே நல்லார் அமைதியாத லால், இயற்கை அவர்களுக்கே இறுதியில் இடந்தந்து உதவுவது உறுதி. எல்லா உலக ஊழிகளிலேயும் எல்லாப் பெரியார்களும் இதனைப் பலபட வலியுறுத்தியுள்ளார்கள்.
நல்லறிவு, நல்லழகு, நல்வாய்மை ஆகிய இயற்கையின் உள்ளார்ந்த நற்பண்புகள் நோக்கிச் செலுத்தப்படும் கருத்துக்களே மனித நாகரிகத்தில் அம்முத்திறச் செல்வங்களையும் வளர்த் துள்ளன. முயல்வோர் உள்ளங்களில் இம்முத்திறக் கூறுகளில்