80
அப்பாத்துரையம் - 25
தீயவளானாலும் கூரிய அறிவுடைய நங்கி இப்பொய் யுரையை ஏற்கமுடியவில்லை. 'நீங்கள் ஆண்டியானால் உங்களுக்கு இவ்வளவு பணம் ஏது?' என்று அவள் கேட்டாள். 'கோயிற்பணி என்று சொல்பவர்களுக்கு இந்நாட்டில் செல்வத்துக்கு என்ன குறைவு' என்று அவன் அவள் வாயை அடைத்துவிட்டுக் குழந்தையுடன் விரைவில் மறைந்தான்.
தீமையில் மரத்துப்போன நங்கியின் மனச்சான்றுக்கு இராமு கூறிய பொய்யுரை இன்னும் தீமைக்கு வலிவு தருவதா யிருந்தது. 'துறவிகளே இத்தகைய செயல்களுக்குத்துணிந்தால் என்போன்றவர் பிழைப்பை நாடி எதுதான் செய்யலாகாது?” என்று அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
குழந்தைக்கோ, இவ்வுலகிலேயே, ஆனால் தன் உணர் வில்லாமல் புதுவாழ்வு கிடைத்தது.
நங்கி குழந்தையைத் திருடும்போது வீட்டில் தாயும் பிள்ளையும் தவிர யாருமில்லை. பக்கத்து ஊர் விழாவிற்காக சேஷு முந்தின மாலையே ஊரைவிட்டுப் போய்விட்டான். விடியற்காலையிலேயே அணையாடைத் துணிகளை எடுத்துக் கொண்டு அவன் தாய் ஆற்றங்கரை சென்றிருந்தாள். முன் னெச்சரிக்கையுடன் நங்கி தாய்க்கும் சேய்க்கும் கொடுத்திருந்த மயக்க மருந்தால் இருவரும் நன்றாக உறங்கினர்.
குழந்தை போனதறியாமல் நெடுநேரம் உறங்கிய சீதை எழுந்ததும் கண்ணைக் கசக்கிக் கொண்டு குழந்தை இருந்த இடத்தை நோக்கினாள். குழந்தையைக் காணோம். நாற்புறமும் சுற்றிப் பார்த்தபின் வாய்விட்டு “ஐயோ என் குழந்தை எங்கே? என் குழந்தை எங்கே?" என்று அலறிக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் ஓடியோடித் தேடினாள். எங்கும் காணாது போகவே அவள் வாயிலும் வயிற்றிலும் அடித்தழுதாள். துணைக்கோ, ஆறுதலுக்கோ ஆளில்லாமல் அழுதழுது நினைவிழந்து சாய்ந்தாள்.
காலை பத்துமணிநேரத்துக்கு மாமியார் வந்து அவளை அதட்டி எழுப்பி ‘எங்கேயடி குழந்தை?” என்றாள்.அவள் “ஐயோ!