காதல் மயக்கம்
83
கங்குவை ஒரு பொருட்டாக எண்ணாதிருந்த பெண் களுக்கு ஒரு சிறிது பொறாமை அல்லது மனத்தாங்கல் தோன்றி யிருக்கலாம். ஆனால் அதை மற்றச் செய்திகள் விரைவில் மறக்கடித்தன. எல்லாருடனும் அவர்களும் வெற்றிலைபாக்கு, கற்கண்டு ஆகியவற்றில் பங்குகொண்டு விட்டார்கள். பிராமணர் களுக்குத் தானமும் காணிக்கையும் முறைப்படி கொடுக்கப் பட்ட டன. எல்லாரும் அளக்கிற கதையை அளந்துவிட்டுப் போகிறபோக்கில் மனநிறைவுடனேயே போயினர்.
கங்குவின் மாமியார் வந்து குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாள். பெயரீட்டு விழாவின் போது குழந்தைக்குப் பாலகிருஷ்ணன் என அருமையாகப் பெயரிடப்பட்டது. தாயும் தந்தையும் பாட்டியும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அவனை வளர்த்தனர். பத்தாமா தத்திற்குள் அக்குழந்தை அம்மூவரை மட்டும் தனிப்பட மா, பா, தா என்று ஓரெழுத்திட்டு அழைக்கக் கற்றுக்கொண்டது.
ஓர் ஆண்டு இங்ஙனம் யாதொரு நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்தது. சீதை அவ்வப்போது காணாமற்போன குழந்தையை நினைத்தாலும், வர, வர, அவள் அதை மறந்து தன் வாழ்விலீடு படத் தொடங்கினாள். பாலகிருஷ்ணன் செல்வர் வீட்டில் பிறந்த குழந்தை போலவே வளர்ந்து வந்தான். கங்குவும் இராமுவும் கூட அதைத் திருடிப்பெற்றோம் என்பதைத் தாங்களே கிட்டத்தட்ட மறந்து தங்கள் பிள்ளையாகவே எண்ணிவிட்டனர் நிலையில் இயற்கை தன் பிழையைத் திருத்தமுனைந்தது.
ந்த
பிள்ளையே இனிப்பெறமாட்டோம் என்றிருந்த கங்கு வுக்குத் தாயின்பந் துய்த்த காரணத்தாலோ, உடல் தேறியத னாலோ எக்காரணத்தாலோ உண்மையிலேயே கருப்பம் உண்டாய்விட்டது. அவள் பத்துமாதத்தில் அரும்பாடுபட்டு ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள்.
இப்பேறு கடும் பேறாகத் தோன்றியதால், தேர்ந்த பெண்மருத்துவ நிபுணர் ஒருவரை அழைத்திருந்தனர். அவள் பேறு காலத்தின்போதே அது முதற்பேறு என்பதை எளிதில் கண்டுகொண்டாள். ஆகவே பாலகிருஷ்ணனை அவள் இதற்கு