3. அன்பின் வெற்றி
கோமான் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு மிகுந்த நன்மதிப்புடன் வாழ்ந்துவந்தவன். அதோடு அவனுக்கு ஐயாயிர ரூபாய் மதிப்புடைய நிலங்கள் உண்டு. அவன் நல்ல உலகிய லறிவும் சுமுகமான நடையுமுடையவன். ஆயினும் சிற்சில வகைகளில் அவன் கண்டிப்பான கொள்கைகளைக் கடைப் பிடித்து வந்தது பலருக்குப் பிடிக்கவில்லை. அவற்றுள் ஒன்று சண்டை சச்சரவுகள், வழக்குகள் ஆகியவற்றை அவன் மனமார வெறுத்ததுஆகும்.
ரு
ரண்டு கட்சிகளுள்ள இடங்களிலெல்லாம் பெரும் பாலோர் ஏதாவது ஒரு கட்சியோடு சேர்ந்து பேசுவார்கள், அல்லது விலகி நிற்பார்கள். கோமானோ விருப்பு வெறுப் பில்லாமல் துணிந்து பொதுநெறி கூறுவான். அதனை புறமும் ஏற்கும்படி இரு கட்சியையும் எதிர்த்துங்கூடப் போராடுவான். இதன் பயனாக இரு கட்சிகளும் ஒன்றுபோல அவனை வெறுப்பதுண்டு. யாராவது வழக்கு மன்றத்திற்குப் போகவிருந்தால் முழு மூச்சுடன் எதிர்த்து நிற்பான். வழக்கு மன்றங்கள் செல்வதால் நீதி கிடையாது, அநீதியே கிடைக்கும் என்பது அவன் விடாப்பிடியான கொள்கை. இங்ஙனம் பலர் வாய் வேதாந்தமாகக் கூறுவதுண்டு. ஆனால் கோமான் அதன் வழியில் நிற்பான்.வாதியாகவோ, எதிர்வாதியாகவோ, சான்றாளராக வோகூட அவன் வழக்கு மன்றம் ஏறமாட்டான். வழக்கறிஞர் களாகவும், சான்றாளராகவுமிருந்தே பிழைப்பவர்கள், வழக்காளிகள் ஆகிய யாவரும் இதற்காக அவனை உள்ளூர வெறுத்தனர்.
கோமான் மனமறிய வஞ்சகமாக எதுவும் செய்யாதவன். பொய் கூறுவதும் அவன் இயல்பன்று ஆனால் வஞ்சகர் வலையில் விழாமலிருக்கப் பொய்யை நல்ல கருவியாக அவன்