உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 25

தற்குத்தான். அவன் சாகும்வரை நாம் பொறுத்திருப்போம் என்பதற்குமில்லை. அவன் இப்படியே நம்மைப் பிழிந்து நம்மைச் சாகடித்தபின் தான் சாவான் போலிருக்கிறது.தெய்வச் செயலாக அவனைக் காலன் நமக்குமுன்பே கொண்டுபோய் விட்டாலும் கூட, நம் வாழ்நாளின் நற்பகுதி போனபின்புதான் அது நேரிடும். நமக்கு அவன் காசு பயன்படாது" என்பாள் நீலா.

கோகிலா அதை முற்றிலும் ஆமோதிப்பவள். உண்மையில் தாயைவிட அவளுக்கே கோமானின் கட்டுப்பாட்டில் பேரளவு சீற்றம் ஏற்பட்டிருந்தது. “நம் நல்ல நாட்களை எல்லாம் பாழாக்க இந்தக் கிழம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. என் இளமையும் அழகும் பயன்படாமல் அவரது வாழ்க்கைபோல நம் வாழ்வும் உப்புச்சப்பற்றுப் போக வேண்டுமென்றுதான் இவ்வளவு வேதாந்தம் படிக்கிறார். கிழவரான அவர் தமக்கேற்ற ஆடையைத் தம் விருப்பப்படி அணிந்து கொள்ளட்டும். அது போல் நமக்கேற்ற ஆடையை நம் விருப்பப்படி நாம் அணிய விடுவது தானே. அவருக்குப் பழையதும் கஞ்சியுந் தான் விருப்பமாயிருக்கலாம். அதற்காக நமக்கும் அதுவா? அவர்போல நமக்கும் விருப்பங்கள் இராதா?” இது அவள் ஓயாத முனக்கம்.

நீலா:அதையெல்லாம் சொல்லுவானேன்! அவர் விருப்பப் படி செய்ய அவரிடம் பணம் இருக்கிறது. நம்மிடம்தான் நமக்

கெனப் பணமில்லையே.

கோகிலா: நம்மிடம் பணமில்லாவிட்டால் என்ன? எங்கும் பெண்களா சம்பாதிக்கிறார்கள். இவர் கொடுக்காவிட்டால் வேறு மனிதத்தன்மை உடைய யாராவது கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அதற்கு மனமில்லாமல் நம்மிடம் பாசமிருப்பது போல் பாசாங்கு காட்டி நம்மைப் புழுக்கைகளாக்கு வானேன்?

நீலா: இதையெல்லாம் யாரிடம் போய்ச் சொல்வது. அவர் இருக்குமட்டும் இப்படி வாழத்தான் வேண்டும். நமக்குப் போக்கேது?

கோகிலா: இந்தச் சனிக்குக் கூடிய விரைவில் ஒரு போக்காடு வராதா?

நீலா: போக்காடும் சாக்காடும் விரும்பி விட்டால் மட்டும் வருமா? வேண்டுமானால் காரியத்தில்....