காதல் மயக்கம்
91
ப்படிப் பேச்சு நீண்டு கொண்டு போயிற்று. மனம் சென்றவழி மதி செல்லவே அவனை நஞ்சிட்டுக் கொன்றால் என்ன என்ற துணிவு ஏற்பட்டது. ஒருநாள் நீண்ட ஆராய்ச்சி களின் பின் அவ்வகையான பொருள் ஒன்று தேடிப் பாலில் கலந்து கொடுத்தனர். அவர்கள் முகத்தோற்றத்தில் அவர் களையும் அறியாமல் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்தும் வழக்கம்போல் கோமான் பாலைக் குடித்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த விளைவு காலை வரையும் காணாது அவர்கள் ஏமாந்தனர்.
உண்மை என்னவென்றால் அவர்கள் யாரோ தற்செயலாக நஞ்சென்று கூறிய பச்சோந்தி எச்சிலைத்தான் கலந்திருந்தனர். கோகிலாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலும் கோபத்திலும் தோட்டத்தில் தேடிப்பிடித்து ஒன்றிரண்டு பச்சோந்திகளைக் கல்லாலடித்துக் கொன்றாள். "கொல்லமுடியாத நஞ்சை ஏன் காண்டு திரிகிறீர்கள்? நீங்களாவது சாவுங்கள்” என்று பதைத்துக் கொண்டிருக்கும் பச்சோந்திகளிடம் கூறித் தன் கோபத்தை மாய்த்துக் கொள்ள முனைந்தாள்.
தன் முயற்சி பலிக்காதது கண்டு நீலாவுக்குத் தன் தலை விதியில் நம்பிக்கை அதிகரித்தது. 'நம் விதியை நாம் அனுப விப்பதைவிட்டு அதை விட்டோட ஒப்புமா? அழுது தொலைப் பதை நன்றாய் அழுது தொலைக்காவிட்டால் கிழம் நோய்ப்பட்டு
ன்றைய அரைப்பட்டினிக்கும் வகையில்லாமல் செய்து விட்டால் என்ன செய்கிறது? நாளைமுதல் இனி இன்னும் னி அதிகமாகத் துணிமணி, தின்பண்டம் வாங்காதே. அது கிழத்துக்குத் தெரிந்தால் மோசம்" என்றாள் அவள்.
கோகிலாவுக்கு இந்தப் புதிய அறிவுரை பிடிக்கவில்லை. அவள் தானாக இன்னும் விசாரித்து அரளிக் கிழங்கைத் தேடிப் பிடித்து அதை உணவில் கலந்து வைத்தாள். ஆனால் அன்றிரவு யாரோ அவசர வேலையாகக் கோமானை அவன் உண்ணுமுன் அழைத்துக் கொண்டு போய் விடவே அச்சூழ்ச்சியும் தோல்வி யுற்றது.
போக்குமுட்டித் திக்குமுக்காடிய கோகிலாவின் மனக் கசப்புக்கு இப்போது ஒரு புத்தம்புதுவழி தென்பட்டது. 'இந்தக் கிழம் நமக்கு வேண்டியதைத் தராவிட்டால் என்ன? தருப