92
||--
அப்பாத்துரையம் - 25
வர்களிடம் மறைவாகப்பெற்றுக் கொள்வோம்'என்று அவள் எண்ணினாள். அதன் பயனாக அன்று முதல் அவள் தன் அழகிலீடுபட்டவர்களிடம் குறிப்பாகத் தன் விருப்பங்களைத் தெரிவித்தாள். நண்பர்களிடமிருந்தும் இளைஞர்களிட மிருந்தும் பல பகட்டான பொருள்கள் வந்து அவள் பெட் டிக்குள் ஒளிந்தன. முதலில் தாய் இதைக் கண்டித்தும், பிறகு தானும் உள்ளூர அதில் மகிழலானாள்.
கோமான் கண்களில் இவை படத்தொடங்கியதும் அவன் கண்டிக்க முற்பட்டான்.
இப்பொருள்களில் பலவும் மாதவன் என்ற ஒரு வீணனிட மிருந்து வந்ததென்று கோமான் அறிந்தான். அவன் இயல்பு களைக் கூறிக் கோகிலாவுக்கு அறிவுரைகள் கூறினான். ஆனால் கோகிலா "மாமா, நீங்கள் தானாக எதுவும் வாங்கிக்கொடுப்ப தில்லை. கொடுப்பவர்களையும் தடுக்க வேறு வேண்டுமா?" என்றாள்.
'இதெல்லாம் பெற வேண்டாம் கோகு. இனி இவற்றைக் கண்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்' என்று கோமான் கோபத்துடன் கூறினான்.
கோகிலா அவனை நிமிர்ந்து பார்த்து 'உன் கோபத்திற்கு இங்கே நாங்கள் அஞ்சும் நிலையில் இல்லை. கொடாக் கண்ட னாகிய உன்னிடம் கஞ்சிக்கு அலைக்கழிவதைவிட, விருப்பத் துடன் தருபவர்களிடம் பெறுவது ஒரு மானக்கேடல்ல, உண்மை யில் உன்னைப்பார்க்க, மாதவன் எவ்வளவோ மேம்பட்டவன்' என்றாள்.
கோமான் இப்போது அவர்கள் மனவெறுப்பை உணர்ந்து கொண்டான். ஆனால் அவன் கோபம் பறந்துபோயிற்று. 'இனி னி அவர்களை நம்பி மனம் போல் போக விடுவது கூடாது. நானே விழிப்பாக இருக்கவேண்டும்' என்று அவன் உறுதி கொண்டான். இவன் கவனிப்பும் மேற்பார்வையும் கண்டிப்பும் இன்னும் மிகுதியாயின.
அவன் நடைகண்டு சீறியவர்களில் இப்போது மூன்றாவது ஒருவனும் சேர்ந்து விட்டான். ஆகவே, மாதவன் வீணனாகிய