உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

101

வெற்றி பெறலாம் என்ற பள்ளிப்பாடச் செய்திகளையும் நீதி களையும் எண்ணி அவன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

வேலையற்றவர்கட்கு வேலை கொடுப்பதற்காகவே ஒருவர் பள்ளி நடத்துவதாக அவன் கேள்விப்பட்டான். 'துன்பப் படுபவர்கட்கே தெரியும் துன்பத்தின் அருமை' என்று நினைத்து அவன் அங்கே சென்றான். அவனது துணையற்ற நிலைமையைக் கண்ட பள்ளி முதல்வர் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் காண்டே அவனை ஆதரவுடன் ஏற்றுக்கொண்டார். ஹரஹரனும் தன் முழுத்திறமையையும் காட்டிக் கல்விப்பணி யிலீடுபட்டான். ஊதியம் ஓர் இருபது ரூபாய்தான் என்பதைக் கூட அவன் பாராட்டவில்லை.

ஆனால் அப்பள்ளியில் மாதந்தோறும் சம்பளம் கொடுக்கும் வழக்கமில்லை என்றும் பத்துப் பன்னிரண்டு மாதங்கள் வரை பாக்கி உண்டென்றும், பாக்கி கொடுக்கப் படுமுன் ஆள் மாறுமென்றும் அவன் அறியப் பத்துப் பன்னி ரண்டுமாதமாயிற்று. முதல்வரிடமிருந்தும் ஆசிரியரிடமிருந்தும் மிக வருந்திப்பெற்ற ஓர் அறுபது ரூபாய் கடனைக் கொடுக் காமலும் வேறு ஊதியம் பெறாமலும் ஓர் ஆண்டு முடிந்ததும் அவன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான். கொடுத்த கடனையும் அத்துடன் யாரும் கேட்கவில்லை. வந்தமட்டுக்கு ஆதாயம் என்று ஹரிஹரன் கல்வி நிலையங்களுக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டான்.

வருவாயற்ற வழக்கறிஞரான ஒரு நண்பர் சட்டம் படிக்கும்படி அறிவுரை கூறினார். வேறுவகையின்றி அவ்வழியே அவன் சிந்தனை சென்றது. ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே! தாய் தந்தையர் "தம் நிலத்தை விற்றாவது படிப்பிக்க எண்ணினர். ஆனால் வாழ்க்கையில் அவன் படித்த படிப்பினையால் அவன் அதற்குத் துணிய மறுத்து விட்டான். “நான் படித்த படிப்புப் போதும். உங்களிடம் கடைசிகாலம் கஞ்சிகுடிக்க இருப்பதையும் கெடுக்க மாட்டேன். நானாகப் பிழைக்கமுடிந்தால் பிழைப்பேன் அல்லது உங்களைக் கெடுக்காமலாவது இருப்பேன்" என்றான்.

பத்மா இதற்குள் பருவமெய்திவிடவே, பூப்பு நிறைவு விழா நடத்தவேண்டுமென்று ஹரிஹரன் தாய் சாரதா வற்புறுத்தி னாள். வருவாயில்லாமல் ஒரு மனைவியின் பொறுப்பை ஏற்க