உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

||-

அப்பாத்துரையம் - 25

அவன் விரும்பவில்லை. அதே சமயம் தன் தோல்விகளின் மனக் கசப்பிடையே தன் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு காதல் துணைவியிருப்பதையும் அவன் நொந்த உள்ளம் அவாவிற்று. அவன் தயக்கத்தைக் குறிப்பாக உணர்ந்த சாரதா அவ்விழாவுக்கான ஏற்பாடுகளில் முனைந்து அதை முடித்து வைத்தாள்.

மணப்பெண் பத்மா தன் சிறுவயதின் விளையாட்டுக் காதலனைத் தன் மனத்தகத்தே வைத்து கனவாகவளர்த்து இப்போது நனவுலகிலேயே தன்னருகில் வந்தணையப் பெற்றுப் பெருமகிழ்ச்சியடைந்தாள். ஆனால் அவள் மகிழ்ச்சிக்கேற்ற மகிழ்ச்சி காட்டாமல் ஹரிஹரன் வாட்டமுற்றான். காதல் கனிந்த உள்ளத்துடன் பத்மா "அன்பரே, ஏன் மனவாட்டம்? வேறு, யாரிடத்தில் சொல்ல முடியாவிட்டாலும், என்னிடத்தில் சொல்லுங்கள். ஒருவர் சிந்தனைக்கு இருவர் சிந்தனை மேலல்லவா?" என்றாள்.

“இத்தகைய காதலுக்கு ஏற்ற கைம்மாறு” வாய்மை ஒன்றே என்று எண்ணினான் ஹரிஹரன். அவன் தன் தோல்விகள், அவற்றினிடையே மனைவியின் பொறுப்பைத்தான் ஏற்க விரும்பாதது, இவற்றுக்கிடையே மனைவியின் துணையை நாடி அதற்கிணங்கியது ஆகியவற்றை விரித்துரைத்து “உனக்கு நான் கணவனாகத் தகுதியுடையவன் அல்லன். உன் மணவாழ்வின் தொடக்கத்தில் உன்னை மகிழ்விக்க முடியாமல், மணநிறைவான வுடனே பழையபடி தொழில் தேடும் வீண்முயற்சியிலீடுபட வேண்டியவனாயிருக்கிறேன்” என்றான்.

பத்மா கணவனை அணைத்துக்கொண்டு

66

இன்று என்னுடன் இருக்கிறீர்கள். இந்தக் கவலைகளை எல்லாம் ஒரு நாளைக்கு மறந்து இன்பமாயிருப்போம். அதன் பின் எது வந்தாலும் இருவரும் ஒன்றுபட்டு வாழ்க்கைப் போரை நடத்துவோம்” என்றாள்.

மனித உணர்ச்சி, தெளிந்த அறிவு ஆகியவற்றில் தோய்ந்த அக்கருத்தை ஏற்று அவன் அன்று பத்மாவையே உலகாகவும் தன்னையே மனிதசமூகமாகவும் கொண்டு ன்பமாகக் கழித்தான்.