உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

105

என்றவாறு அவற்றை வாங்குவதற்கு மாறாக அவற்றைத்தானே கைப்பற்றிக் கொண்டு “எனக்குக் குழாத்தினர் தரவேண்டும் கடனுக்கு ஈடாயிற்று, போ" என்றான். சூழ்ந்துநின்ற ஹரிஹரன் கோபம்கொண்டு வழக்கறிஞர் ஒருவரையடுத்து அவர் கேட்ட பணம் தந்து வழக்குத் தொடுத்தான்.

வழக்கு அவனுக்கு எதிராக முடிந்தது. எதிரிக்கு ஆன 25 ரூபாய் செலவும் அவன்பேரில் சுமந்தது. துணைப்பேராள் என்பதற்காகத் தான் 200 ரூபாய் கட்டிய பத்திரத்தைக் காட்டினான். அதில் வரித்தலை இல்லாததிற்காகப் பின்னும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டியதாயிற்று. இதனைக்கொடுக்க முடியாதென்றும் மன்றம் நீதியற்றதென்றும் கூறியதற்காக மன்றத்தார் புது வழக்குத் தொடுத்து மன்றத்தை அவமதித்த தற்காக 10 ரூ தண்டம் விதித்தனர். மேலும் எதிர்த்தால் சிறைத் தண்டனை வருமென்று அவன் அதனைக் கட்டித் தீர்த்தான்.

இரண்டொருநாளில் ஹரிஹரன் பேராளை நேரில் ஓரிடத்தில் சந்தித்தான். தன் கோபத்தையும், ஆத்திரத்தையும் அடக்கமுடியாமல் அவனைத் தாவித்தாவி அடித்தான். இதனால் அவன்மீது புது வழக்குத் தொடரப்பட்டது. அவன் அடிப்பதற்குக் கூறிய காரணம் அவன் குற்றத்தை உறுதிப்படுத்த மட்டுமே உதவிற்று. அவனுக்கு 50 ரூபாய் தண்டம் அல்லது ஒரு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. காவல் பிடிக் காது ஹரிஹரன் தண்டம் கட்டினான். அதில் பாதி போராளுக்குத் தரப்பட்டது. தற்கால அரசியல் முறையில் காவல் துறையும் வழக்கு மன்றமும் செல்வர். அநீதர் ஆகியவர் சார்புடைய தாகவே இருப்பதை யறிந்து, 'இதை அறிய இதுவரைச் செலவு செய்த பணம் ஒரு நல்ல விலைதான்' என்று எண்ணினான்.

எல்லாத் துறைகளிலும் ஊழல்களே நிறைந்திருப்பதுகண்ட ஹரிஹரனுக்கு இவற்றை அகற்றப் பாடுபடுவதாகக் கூறப்படும் பத்திரிகைத்துறை நினைவுக்கு வந்தது. உடனே முதன்மையான தேசீயப் பத்திரிகை ஒன்றினை அடுத்துப் பத்திரிகாசிரியரைக் கண்டான். அவர் பத்திரிகைத் தொழிலின் கரை காணாப் பரப்பையும் நுட்பதிட்பங்களையும் எடுத்துரைத்து, நன்றாக உழைப்பதாயின் உழைப்புக்கேற்ற கூலிதருவதாக வாக்களித்தார். எவரும் இதுவரை உழையாத உழைப்பு உழைத்து, எவரையும் விட